பெட்ரோல் பங்கில் ரூ.73 லட்சம் மோசடி


பெட்ரோல் பங்கில் ரூ.73 லட்சம் மோசடி
x
தினத்தந்தி 15 Sept 2023 1:15 AM IST (Updated: 15 Sept 2023 1:15 AM IST)
t-max-icont-min-icon

பெட்ரோல் பங்கில் ரூ.73 லட்சம் மோசடி செய்த பெண் ஊழியர் கைது செய்யப்பட்டார்.

கோயம்புத்தூர்

கோவை


பெட்ரோல் பங்கில் ரூ.73 லட்சம் மோசடி செய்த பெண் ஊழியர் கைது செய்யப்பட்டார்.


இதுகுறித்து போலீசில் கூறியதாவது:-


ரூ.73 லட்சம் மோசடி


கோவை செட்டிப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது55). இவர் கிணத்துக்கடவு பகுதியில் பெட்ரோல் பங்க் நடத்தி வருகிறார். இங்கு கவுசல்யா (24) என்பவர் கடந்த 2019-ம் ஆண்டு முதல் ஊழியராக வேலை செய்து வந்தார்.


இந்த பெட்ரோல் பங்கில் வாடிக்கையாளர்கள் ஆன்லைன் மூலம் வங்கி கணக்கில் செலுத்திய ரூ.73 லட்சத்தை கவுசல்யா மோசடி செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்து பெட்ரோல் பங்க் உரிமையாளர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணனிடம் புகார் செய்தார்.


அதன் மீது விசாரணை நடத்த மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதன்பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி, கிணத்துக்கடவை சேர்ந்த கவுசல்யாவை நேற்று கைது செய்தனர்.


சொத்து பத்திரங்கள் பறிமுதல்


இந்த மோசடி பணத்தில் வாங்கிய 2 சொத்துகளின் பத்திரம், கார், 2 பவுன் தங்க நகை, ரூ.90 ஆயிரம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். கைதான கவுசல்யா கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். மோசடி வழக்கில் பெண் ஊழியர் கைதான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story