பொள்ளாச்சி ரெயில் நிலையத்தில் குடிநீர் வசதிக்கு ரூ.76 லட்சம் நிதி ஒதுக்கீடு-ரெயில்வே அதிகாரிகள் தகவல்


பொள்ளாச்சி ரெயில் நிலையத்தில் குடிநீர் வசதிக்கு ரூ.76 லட்சம் நிதி ஒதுக்கீடு-ரெயில்வே அதிகாரிகள் தகவல்
x
தினத்தந்தி 25 Nov 2022 6:45 PM GMT (Updated: 25 Nov 2022 6:47 PM GMT)

பொள்ளாச்சி ெரயில் நிலையத்துக்கு ரூ. 76 லட்சம் செலவில் குடிநீர் வசதி ஏற்படுத்தப்பட உள்ளதாக ெரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி

பொள்ளாச்சி ெரயில் நிலையத்துக்கு ரூ. 76 லட்சம் செலவில் குடிநீர் வசதி ஏற்படுத்தப்பட உள்ளதாக ெரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

குடிநீர் வசதி

ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கடந்த 1915-ம் ஆண்டு பொள்ளாச்சியில் ரெயில் சேவை தொடங்கப்பட்டது. ரெயில்வே பணிமனை, ஊழியர்கள் குடியிருப்பு, ரெயில் நிலையத்துக்கும் அம்பராம்பாளையம் ஆழியாற்றில் இருந்து தண்ணீர் கொண்டு வரப்பட்டது.

இதற்காக நீர் உந்து நிலையம் அமைக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் கடந்த 2008-ம் ஆண்டு மீட்டர்கேஜ் ரெயில் பாதையில் இருந்து அகல ரெயில் பாதையாக மாற்றும் பணிகள் தொடங்கியது. அப்போது குடிநீர் குழாய்கள் அகற்றப்பட்டன. அதன்பிறகு அகல ரயில் பாதை பணிகள் முடிந்து ரெயில் போக்குவரத்து நடைபெற்று வருகிறது. ஆனால் ரெயில் நிலையத்தில் பயணிகளுக்கு தேவையான குடிநீர் வசதி இல்லை.

நிதி ஒதுக்கீடு

இதனால் பயணிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். இதற்கிடையில் ரெயில் நிலைய வளாகத்தில் உள்ள கிணற்றில் இருந்து தற்போது தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்த தண்ணீர் சுகாதாரமாக இல்லாததால் குடிநீர் வசதி ஏற்படுத்த வேண்டும் என்று ரெயில் பயணிகள் கோரிக்கை விடுத்தனர். இதை தொடர்ந்து பொள்ளாச்சி ரெயில் நிலையத்திற்கு குடிநீர் வசதி ஏற்படுத்த ரூ.76 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இதுகுறித்து ரெயில்வே அதிகாரிகள் கூறியதாவது:- ஆழியாற்றில் இருந்து பொள்ளாச்சி ரெயில் நிலையத்துக்கு குடிநீர் கொண்டு வரும் திட்டத்தை செயல்படுத்த ரூ.76 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. சீனிவாசபுரம், அம்பராம்பாளையம், கெட்டிமல்லன்புதூர், சிங்காநல்லூர் ஆகிய ரோடுகள், சுரங்க பாதை உள்ள இடங்களில் குழாய் பதிக்கப்படும். மேலும் ஏற்கனவே இருந்த குழாய்களை அகற்றிவிட்டு புதிதாக குழாய்கள் பதிக்கப்பட உள்ளன. நீர் உந்து நிலையங்களில் புதிதாக எந்திரங்கள் பொருத்தப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்படும். இந்தப் பணிகளை விரைவில் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story