அரசு பள்ளிகளுக்கு ரூ.8 லட்சம் தளவாட பொருட்கள்


அரசு பள்ளிகளுக்கு ரூ.8 லட்சம் தளவாட பொருட்கள்
x

அரசு பள்ளிகளுக்கு ரூ.8 லட்சம் தளவாட பொருட்கள் வழங்கப்பட்டன.

அரியலூர்

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் ஒன்றியத்திற்குட்பட்ட வாணதிரையன்பட்டினம் அரசு மேல்நிலைப்பள்ளி, உடையார்பாளையம் அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளி ஆகியவற்றுக்கு சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.8 லட்சம் மதிப்பீட்டிலான பெஞ்ச், டெஸ்க் மற்றும் தளவாட பொருட்களை சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் வழங்கினார். நிகழ்ச்சியில் ஜெயங்கொண்டம் வட்டார வளர்ச்சி அலுவலர் (வ.ஊ) பிரபாகரன், பள்ளி தலைமையாசிரியர்கள், பேரூராட்சி தலைவர் மலர்விழி ரஞ்சித்குமார், வாணதிரையன் பட்டினம் ஊராட்சிமன்ற தலைவர் முருகன், உள்ளாட்சி பிரதிநிதிகள், கழக முன்னோடிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

1 More update

Next Story