கோவில்களில் ரூ.80½ கோடியில் கட்டுமானப்பணிகள்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்


கோவில்களில் ரூ.80½ கோடியில் கட்டுமானப்பணிகள்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்
x

இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ரூ.80.56 கோடி மதிப்பீட்டில் கோவில்களில் மேற்கொள்ளப்பட உள்ள கட்டுமானப் பணிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

சென்னை,

அகில இந்திய அளவில் உயர்கல்வி சேர்க்கையில் தமிழ்நாடு முதலிடம் வகித்து வருகிறது.

இந்த நிலையில் பல்வேறு இடங்களில் ரூ.87.76 கோடி செலவில் கட்டப்பட்டு உள்ள உயர்கல்வித் துறை கட்டிடங்களை தலைமைச் செயலகத்தில் காணொலிக்காட்சி மூலம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

கோவில் திருப்பணிகள்

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் இதுவரை 6,962 கோவில்களில் ரூ.3,373 கோடி செலவில் 9,294 திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.

அந்த வகையில் திருவள்ளூர் மாவட்டம் திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோவிலில் பக்தர்கள் காத்திருக்கும் கூடம், உணவருந்தும் கூடம் கட்டும் பணிகள்; சென்னை பள்ளிக்கரணை வீரத்தம்மன் கோவிலில் வணிக வளாகம் கட்டும் பணி; திருவள்ளூர் மாவட்டம் சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் திருக்குளத் திருப்பணி; சென்னை சைதாப்பேட்டை காரணீஸ்வரர் கோவிலில் பணியாளர் குடியிருப்பு கட்டும் பணி; சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி சுவாமி கோவில் சார்பில் புதிய அடுக்குமாடி குடியிருப்பு கட்டும் பணிகள்; மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவிலில் அன்னதானக் கூடம் கட்டும் பணி உள்பட மொத்தம் ரூ.80.56 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள புதிய திட்டப் பணிகளுக்கான கட்டுமானப் பணிகளுக்கு முதல்-அமைச்சர் தலைமைச் செயலகத்தில் நேற்று அடிக்கல் நாட்டினார்.


Related Tags :
Next Story