ரூ.399 பிரீமியம் செலுத்தினால் ரூ.10 லட்சம் விபத்து காப்பீடு


ரூ.399 பிரீமியம் செலுத்தினால் ரூ.10 லட்சம் விபத்து காப்பீடு
x

அஞ்சல் துறையில் ரூ.399 பிரீமியம் செலுத்தினால் ரூ.10 லட்சம் விபத்து காப்பீடு தபால் கோட்ட சூப்பிரண்டு தகவல் அளித்தார்

மயிலாடுதுறை

மயிலாடுதுறை தபால் துறை கோட்ட சூப்பிரண்டு ரமணி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் இந்தியா போஸ்ட் பேமென்ட் வங்கியின் மூலம் ஆண்டிற்கு ரூ.399 செலுத்தினால் ரூ.10 லட்சம் மதிப்புள்ள விபத்து காப்பீடு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஏழை மக்களுக்கு காப்பீடு திட்டங்களின் பலன்கள் சென்றடையும் வகையில் தபால் நிலையங்கள், தபால்காரர், கிராம அஞ்சல் ஊழியர்கள் மூலமாக மிகக் குறைந்த பிரீமியம் தொகையுடன் கூடிய இந்த விபத்து காப்பீடு திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. 18 வயது முதல் 65 வயது வரை உள்ளவர்கள் இந்த காப்பீடு திட்டத்தில் சேரலாம். விண்ணப்ப படிவம், முகவரி சான்றின் நகல்கள் போன்ற எந்த விதமான காகித பயன்பாடு இன்றி தபால்காரர் கொண்டுவரும் ஸ்மார்ட் போனில் விரல் ரேகை மூலம் 5 நிமிடங்களில் முற்றிலும் டிஜிட்டல் முறையில் இந்த காப்பீடு வழங்கப்படுகிறது. எனவே பொதுமக்கள் அனைவரும் அருகில் உள்ள தபால் நிலையங்கள் அல்லது தபால்காரர்கள் மூலம் இந்த காப்பீடு திட்டத்தில் இணைந்து பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story