குடும்பத்தலைவிகளுக்கு ரூ.1000 விரைவில் வழங்கப்படும் - பழனிவேல் தியாகராஜன்
குடும்பத்தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 விரைவில் வழங்கப்படும் என்று நிதி அமைச்சா் பழனிவேல் தியாகராஜன் தொிவித்து உள்ளாா்.
சென்னை,
சட்டசபை தேர்தலின்போது தி.மு.க சார்பில் வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையில் குடும்பத்தலைவிகளுக்கு மாதந்தோறும் உரிமைத்தொகை தலா ரூ.1,000 வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
தமிழகத்தில் தி.மு.க. ஆட்சியை அமைத்து 1 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் இந்த திட்டம் குறித்த எதிர்பார்ப்பு பெண்கள் மத்தியில் எழுந்தது.
இந்த நிலையில், குடும்பத்தலைவிகளுக்கு உரிமைத்தொகை வழங்கும் திட்டத்திற்காக விவரங்கள் சேகாிக்கப்பட்டு வருவதாகவும், விரைவில் ரூ.1,000 வழங்கப்படும் என்று நிதி அமைச்சா் பழனிவேல் தியாகராஜன் தொிவித்து உள்ளாா்.
Related Tags :
Next Story