பச்சை தேயிலை கிலோவுக்கு ரூ.15.46 நிர்ணயம்


பச்சை தேயிலை கிலோவுக்கு ரூ.15.46  நிர்ணயம்
x
தினத்தந்தி 1 July 2023 10:45 PM GMT (Updated: 1 July 2023 10:45 PM GMT)

கடந்த மாத சராசரி விலையாக பச்சை தேயிலை கிலோவுக்கு ரூ.15.46 நிர்ணயம் செய்யப்பட்டது.

நீலகிரி


குன்னூர்


நீலகிரி மாவட்டத்தில் தேயிலை விவசாயம் பிரதானமாக உள்ளது. 65 ஆயிரம் விவசாயிகள் தேயிலை சாகுபடி செய்கின்றனர். அவர்கள் தொழிற்சாலைகளுக்கு பச்சை தேயிலையை வினியோகித்து வருகின்றனர். அங்கு உற்பத்தி செய்யப்பட்ட தேயிலைத்தூள் ஏலம் மூலம் விற்பனை செய்யப்படுகிறது. தேயிலை விலையை மாதந்தோறும் விலை நிர்ணய கமிட்டி நிர்ணயித்து அறிவித்து வருகிறது. இதுகுறித்து தேயிலை வாரிய தென் மண்டல செயல் இயக்குனர் டாக்டர் முத்துகுமார் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:- 2021-ம் ஆண்டின் தேயிலை சந்தை கட்டுபாட்டு ஆணையின் பேரில், மாதந்தோறும் பச்சை தேயிலைக்கு விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. இதன்படி கடந்த ஜூன் மாத மாவட்ட சராசரி விலையாக கிலோவுக்கு 15 ரூபாய் 46 பைசா என்று விலை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த விலை கடந்த மாதம் நடைபெற்ற ேதயிலை ஏலத்தில் கிடைக்கப்பெற்ற சி.டி.சி. தேயிலைத்தூளின் விற்பனை விலையை அடிப்படையாக கொண்டு நிர்ணயம் செய்யப்பட்டது ஆகும். மேற்கண்ட மாவட்ட சராசரி விலையை அனைத்து தேயிலை தொழிற்சாலைகளும் விவசாயிகளுக்கு வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.



Next Story