2 பயணிகளிடம் ரூ.16 லட்சம் கடத்தல் தங்க நகைகள் பறிமுதல்


2 பயணிகளிடம் ரூ.16 லட்சம் கடத்தல் தங்க நகைகள் பறிமுதல்
x

2 பயணிகளிடம் ரூ.16 லட்சம் கடத்தல் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

திருச்சி

தங்கம் கடத்தல்

திருச்சி விமான நிலையத்திற்கு வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களில் சில பயணிகள் தங்கம் கடத்தி வருவதும், அதனை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்வதும் தொடர்கதையாக உள்ளது. இதனை தடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை சுங்கத்துறை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று காலை 8.20 மணிக்கு சிங்கப்பூரில் இருந்து இண்டிகோ விமானம் திருச்சி விமான நிலையத்திற்கு வந்தது. இந்த விமானத்தில் வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் இருந்த பயணியிடம் விசாரணை நடத்தினர். இதில், அவர் தஞ்சாவூரை சேர்ந்த வீரவேல்(வயது 32) என்பதும், ரூ.6 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பிலான 120 கிராம் தங்க நகையை கடத்தி வந்ததும் தெரியவந்தது. அவரிடம் இருந்து நகையை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

ரூ.16 லட்சம் மதிப்பில்...

இதேபோல் காலை 11.20 மணிக்கு துபாயில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் திருச்சி வந்தது. இந்த விமானத்தில் வந்த பயணிகளை அதிகாரிகள் சோதனை செய்தபோது, திருச்சியை சேர்ந்த முகமது ஷேக் என்ற பயணி தனது உடமையில் மறைத்து 170 கிராம் தங்க நகையை கடத்தி வந்தது தெரியவந்தது.

அந்த தங்க நகையை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அந்த நகையின் மதிப்பு ரூ.9.40 லட்சம் என்று தெரியகிறது. நேற்று ஒரே நாளில் திருச்சி விமான நிலையத்தில் ரூ.16 லட்சம் மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story