பொக்லைன் டிரைவர் குடும்பத்துக்கு ரூ.20½ லட்சம் இழப்பீடு


பொக்லைன் டிரைவர் குடும்பத்துக்கு ரூ.20½ லட்சம் இழப்பீடு
x
தினத்தந்தி 8 July 2023 8:33 PM IST (Updated: 9 July 2023 4:25 PM IST)
t-max-icont-min-icon

கார்மோதி இறந்த பொக்லைன் டிரைவர் இறந்த விபத்தில் அவரது குடும்பத்துக்கு ரூ.20½ லட்சம் வழங்க வேண்டும் என மக்கள் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

ராணிப்பேட்டை

கார்மோதி இறந்த பொக்லைன் டிரைவர் இறந்த விபத்தில் அவரது குடும்பத்துக்கு ரூ.20½ லட்சம் வழங்க வேண்டும் என மக்கள் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

ராணிப்பேட்டை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் சார்பு நீதிபதி ஜெயசூரியா, மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி நவீன்துரை பாபு ஆகியோர் முன்னிலையில் மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) நடைபெற்றது. மோட்டார் வாகன விபத்து, குடும்ப வழக்கு என மொத்தம் 16 வழக்குகளுக்கு இதன் மூலம் தீர்வு காணப்பட்டது.

ஆற்காட்டை அடுத்த மேச்சேரி கிராமத்தைச் சேர்ந்த சத்தியமூர்த்தி (வயது 28) என்ற பொக்லைன் டிரைவர் கடந்த ஆண்டு செப்டம்பர் 3-ந் தேதி விபத்தில் கார் மோதி பலியானார்.

அவரது குடும்பத்தினர் இழப்பீடு கேட்டு தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அதில் சத்தியமூர்த்தியின் குடும்பத்தினர் சார்பில் வழக்கறிஞர் அண்ணாதுரை ஆஜராகி வாதிட்டார்.

விசாரணை முடிவில் சத்தியமூர்த்தியின் குடும்பத்துக்கு ரூ.20 லட்சத்து 50 ஆயிரத்தை இழப்பீடாக வழங்க மேக்மா பொது காப்பீட்டு நிறுவனத்திற்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


Next Story