ரூ.23 லட்சம் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைப்பு


ரூ.23 லட்சம் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைப்பு
x

விருதுநகரில் ரூ.23 லட்சம் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

விருதுநகர்


விருதுநகர் மாவட்டத்தில் ஆன்லைன் மூலம் தங்கள் வங்கி கணக்குகளில் இருந்து பணத்தை இழந்தவர்கள் நடவடிக்கை எடு்க்க கோரிக்கை விடுத்து போலீசில் புகார் செய்தனர். இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க போலீஸ் சூப்பிரண்டு சீனிவாச பெருமாள் உத்தரவிட்டார். அதன்பேரில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணனின் வழிகாட்டுதலின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர்கள் ஆருண் மற்றும் ஜெயப்பிரகாஷ் ஆகியோர் புலன் விசாரணை மேற்கொண்டனர். ஆன்லைன் மூலம் பணத்தை மோசடி செய்தவரிடம் இருந்து ரூ.23 லட்சத்து 83 ஆயிரத்து 58 மீட்கப்பட்டு பணத்தை இழந்தவர்கள் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டது. இதுகுறித்து போலீஸ் சூப்பிரண்டு சீனிவாச பெருமாள் கூறுகையில், ஆன்லைன் மூலம் பணத்தை இழந்தவர்கள் சைபர்கிரைம் போலீஸ் டெலிபோன் எண் 1930 மூலமாகவோ அல்லது www.cybercrime.gov.in என்ற இணையதளம் மூலமாகவோ புகார் தெரிவித்தால் உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு பணம் மீட்கப்படும் என்றார்.


Next Story