5 கடைகளின் உரிமையாளர்களுக்கு ரூ.25 ஆயிரம் அபராதம்


5 கடைகளின் உரிமையாளர்களுக்கு ரூ.25 ஆயிரம் அபராதம்
x

5 கடைகளின் உரிமையாளர்களுக்கு ரூ.25 ஆயிரம் அபராதம்

தஞ்சாவூர்

தஞ்சை மாவட்டத்தில் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட சிகரெட் லைட்டர்களை உரிய விதிமுறைகளை பின்பற்றாமல் விற்பனை செய்த 5 கடைகளின் உரிமையாளர்களுக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

அதிகாரிகள் சோதனை

தொழிலாளர் முதன்மை செயலாளர், ஆணையர் மற்றும் சட்டமுறை எடையளவு கட்டுப்பாட்டு அதிகாரி ஆகியோரின் ஆணையின்படியும், திருச்சி கூடுதல் தொழிலாளர் ஆணையர் மற்றும் இணை ஆணையர் அறிவுரையின்படி தஞ்சை மாவட்டத்தில் அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

தஞ்சை தொழிலாளர் உதவி ஆணையர் தனபாலன் தலைமையில் உதவி ஆய்வாளர்கள் தஞ்சை, கும்பகோணம், பட்டுக்கோட்டை ஆகிய பகுதிகளில் சோதனை மேற்கொண்டனர்.

சட்டமுறை எடையளவு மற்றும் பொட்டலப்பொருட்கள் விதிகளின் கீழ் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சிகரெட் லைட்டர்களில் சட்டமுறை எடையளவுகள் விதிகளை மீறுவதாக பெறப்பட்ட புகார்கள் தொடர்பாக இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது.

5 கடைகளுக்கு அபராதம்

அப்போது மேற்படி சட்டத்தின்படி முரண்பாடுகள் காணப்பட்ட 5 கடைகளின் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு தலா ரூ.5 ஆயிரம் வீதம் ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சிகரெட் லைட்டர்களில் சட்டமுறை எடையளவுகள் விதிகளை பின்பற்றி விற்பனை செய்ய வேண்டும். தவறும் பட்சத்தில் சோதனை மேற்கொள்ளும் போது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தொழிலாளர் உதவி ஆணையர் தனபாலன் தெரிவித்துள்ளார்.


Next Story