புதிய தீயணைப்பு நிலையங்கள் அமைக்க ரூ.7¼ கோடி; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தகவல்
ஒரகடம் உள்ளிட்ட இடங்களில் ரூ.7¼ கோடியில் புதிய தீயணைப்பு நிலையங்கள் அமைக்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
சென்னை,
* ஒரகடம், திருவெறும்பூர், ராதாபுரம், ரிஷிவந்தியம் ஆகிய 4 இடங்களில் புதிய தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் நிலையங்கள் தலா ரூ.1 கோடியே 81 லட்சத்து 32 ஆயிரம் மதிப்பீட்டில் மொத்தம் ரூ.7 கோடியே 25 லட்சத்து 28 ஆயிரம் செலவினத்தில் நிறுவப்படும்.
* திருநெல்வேலியை தலைமையிடமாக கொண்டு புதிய மண்டலம் உருவாக்கப்படும்.
வாகனங்கள் கொள்முதல்
* தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் நிலையங்களின் பயன்பாட்டிற்காக 35 நீர்தாங்கி வண்டிகள் கொள்முதல் செய்யப்படும்.
* தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் நிலையங்களின் பயன்பாட்டிற்காக 27 பெரும் தண்ணீர் லாரிகள் கொள்முதல் செய்யப்படும்.
* தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறையின் மாவட்ட அலுவலர்கள் மற்றும் மண்டல அலுவலர்களின் பயன்பாட்டிற்காக புதிதாக 7 ஜீப்புகள் கொள்முதல் செய்யப்படும்.
* கடற்கரை பகுதியில் ரோந்து மற்றும் மீட்புப்பணிகளை மேற்கொள்ள 3 அனைத்து நிலப்பரப்பு வாகனங்கள் கொள்முதல் செய்யப்படும்.
* புதிய தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் நிலையங்களின் பயன்பாட்டிற்காக உபகரணங்கள் கொள்முதல் செய்யப்படும்.
தீயணைப்பு நிலையம் மேம்படுத்துதல்
* சென்னை புறநகர் மாவட்டம் பூந்தமல்லி தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் நிலையம் மேம்படுத்தப்படும்.
* மத்திய சென்னை மாவட்டம் கீழ்ப்பாக்கம் தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் நிலையம் மேம்படுத்தப்படும்.
* தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை இயக்குனரகத்தில் உள்ள அவசரகால கட்டளை மையம் வலுப்படுத்தப்படும்.
புதிய கட்டிடங்கள்
* திருவல்லிக்கேணி தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் நிலையத்துக்கு புதிய கட்டிடம் ரூ.5 கோடியே 94 லட்சத்து 38 ஆயிரம் செலவில் கட்டப்படும்.
* சேலம் தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் நிலையத்துக்கு புதிய கட்டிடம் ரூ.6 கோடியே 8 லட்சம் செலவில் கட்டப்படும்.
* ஸ்ரீரங்கம் தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் நிலையத்துக்கு புதிய கட்டிடம் ரூ.4 கோடியே 85 லட்சத்து 51 ஆயிரம் செலவில் கட்டப்படும்.
கூடுதல் நிதி ஒதுக்கீடு
* தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறையின் கட்டிடங்கள் மற்றும் குடியிருப்புகளின் பராமரிப்பு பணிகளுக்காக கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
* தீயணைப்பு பணியாளர்களின் சேமநல நிதிக்கான மானியம் உயர்த்தி வழங்கப்படும்.
* தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறையில் மண்டல மற்றும் மாநில அளவில் நடத்தப்படும் விளையாட்டு போட்டிகளுக்கான செலவினத் தொகையின் உச்சவரம்பு ரூ.6 லட்சமாக உயர்த்தப்படும்.
* தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை பணியாளர்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் காப்பீட்டு இடர் பாதுகாப்பு தொகை உயர்த்தி வழங்கப்படும்.
* தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறையின் மெரினா மீட்புப்பணிகள் நிலைய பணியாளர்களுக்கு இடர்ப்படி ரூ.6 ஆயிரமாக வழங்கப்படும்.
* தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை பணியாளர்களுக்கு கட்டப்படும் குடியிருப்புகளின் கட்டிடப் பரப்பளவு அதிகப்படுத்தப்படும்.
புதிய பணியிடம்
* நடைமுறையில் உள்ள பாதுகாப்பு தன்னார்வ தொண்டர்கள் திட்டத்தை வலுப்படுத்த தன்னார்வலர்களுக்கு அடையாள வில்லை மற்றும் மதிப்பூதியம் வழங்கப்படும்.
* காவல் துறை தலைமை இயக்குநர், இயக்குநர், தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறைக்காக சட்ட விவகாரங்களில் உதவிட இயக்குநகரத்தில் சட்ட ஆலோசகர் என்ற புதிய பணியிடம் உருவாக்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.