ரூ.8 கோடி ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு

ரூ.8 கோடி ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு
சுசீந்திரம்:
இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான ரூ.8 கோடி ஆக்கிரமிப்பு நிலம் மீட்கப்பட்டது.
ஆக்கிரமிப்பு நிலம்
இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்க தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி குமரி மாவட்டத்திலும் அவ்வப்போது ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
இந்தநிலையில் மருங்கூர் தேசிக விநாயகர் கோவிலுக்கு உட்பட்ட தேரூர் பேரூராட்சி எல்லை புது கிராமம் பகுதியில் 9 ஏக்கர் 67 சென்ட் இடத்தை தனி நபர் ஆக்கிரமித்து வைத்துள்ளது அதிகாரிகளுக்கு தெரிய வந்தது.
மீட்பு
உடனே இந்து சமய அறநிலைத்துறை உதவி ஆணையர் தங்கம் தலைமையில் நில மீட்பு குழு தாசில்தார் சஜித் மற்றும் செயல் அலுவலர் சுமதி, தேரூர் பேரூராட்சி துணைத் தலைவர் மாதவன், நில அலுவலர்கள் அஜித், விக்னேஷ், ராஜேஷ் ஆகியோர் நிலத்தை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
இதில் 6 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டுள்ளது. மீதம் உள்ள நிலம் விரைவில் மீட்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். மீட்கப்பட்ட நிலத்தின் மதிப்பு சுமார் ரூ.8 கோடி ஆகும்.






