ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலம்


ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலம்
x
தினத்தந்தி 17 April 2023 12:15 AM IST (Updated: 17 April 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

சிங்கம்புணரியில் ஆர்.எஸ்.எஸ். சார்பில் அணிவகுப்பு ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

சிவகங்கை

சிங்கம்புணரி

சிங்கம்புணரியில் ஆர்.எஸ்.எஸ். சார்பில் அணிவகுப்பு ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. சிங்கம்புணரி சித்தர் முத்து வடுகநாதர் கோவிலில் தொடங்கிய அணி வகுப்பு ஊர்வலத்தை முத்து வடுகநாதர் வாரிசு ராமசுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக சென்று சிங்கம்புணரி சீரணி அரங்கம் முன்பு நிறைவு பெற்றது. ஊர்வலத்தில் சுமார் இரண்டு ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்து கொண்டனர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ் தலைமையில் கூடுதல் துணை போலீஸ் சூப்பிரண்டுகள், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் முன்னிலையில் 417 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து சீரணி அரங்கத்தில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு சிங்கம்புணரி கிராம அம்பலம் சத்தியசீலன் தலைமை தாங்கினார். பல்வேறு தலைவர்கள், பொறுப்பாளர்கள் முன்னிலை வகித்தனர். சமுதாய நல்லிணக்க பேரவை தென்தமிழ்நாடு ராஷ்ட்ரீய சேவக சங்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் ராஜ முருகானந்தம் சிறப்புரை ஆற்றினார். நிகழ்ச்சியில் சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை மாவட்ட கோட்ட தலைவர் மங்களேஸ்வரன், கோட்ட செயலாளர் பாலசுப்பிரமணியன், மாவட்ட துணை தலைவர் குகன் ஜி, ஜில்லா பொறுப்பாளர் தினேஷ் மற்றும் சிவகங்கை மாவட்ட ஆர்.எஸ்.எஸ். பொறுப்பாளர்கள், ஒன்றிய, நகர பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.


Next Story