ஆர்எஸ்எஸ் பேரணி எப்போதும் அமைதி ஊர்வலமாகவே இருந்தது - தமிழிசை சவுந்தரராஜன்
ஆர்எஸ்எஸ் பேரணி எப்போதும் அமைதி ஊர்வலமாகவே இருந்தது. . என கூறியுள்ளார்.
சென்னை,
தமிழ்நாடு முழுவதும் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் அக்டோபர் 2-ந் தேதி அணிவகுப்பு ஊர்வலம் நடத்த அனுமதி கோரி இந்து மத அமைப்பான ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள் பலர் சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தனர். இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி இளந்திரையன், ஆர்எஸ்எஸ் நிபந்தனைகளுடன் ஊர்வலத்துக்கு அனுமதி வழங்குமாறு போலீசாருக்கு உத்தரவிட்டார்.
இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த கவர்னர் தமிழிசை கூறியதாவது ;
எந்த மாநிலமாக இருந்தாலும் அங்கு பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் நடைபெற கூடாது. இது பொது மக்களுக்கு அச்சத்தை அளிக்கிறது.ஒரு மாநிலத்தில் சமய சார்பற்ற உணர்வு இருக்க வேண்டும்.
அனைவரும் சமம் என்று சொல்லும் போது ஒரு இயக்கத்திற்கு மட்டும் எப்படி தடை சொல்ல முடியும் ஆர்எஸ்எஸ் பேரணியை ஏன் தடை செய்ய வேண்டும்.ஆர்எஸ்எஸ் பேரணி எப்போதும் அமைதி ஊர்வலமாகவே இருந்தது. தேச உணர்வு உள்ளவர்கள் காந்தி ஜெயந்திஅன்று பேரணி செய்வதில் என்ன தவறு?. என கூறியுள்ளார்.