ஆர்.எஸ்.எஸ். பேரணி அமைதியாக நடைபெற்றது


ஆர்.எஸ்.எஸ். பேரணி அமைதியாக நடைபெற்றது
x

விழுப்புரத்தில் போலீஸ் பாதுகாப்புடன் ஆர்.எஸ்.எஸ். பேரணி அமைதியாக நடைபெற்றது.

விழுப்புரம்

விழுப்புரம் மாவட்ட ஆர்.எஸ்.எஸ். (ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் சங்கம்) சார்பில் விழுப்புரத்தில் ஆர்.எஸ்.எஸ். பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. முன்னதாக நேற்று மாலை 3:30 மணிக்கு விழுப்புரம் புதிய பஸ் நிலையம் அருகில் இருந்து டாக்டர் வெற்றிவேல் முருகன் தலைமையில் ஆர்.எஸ்.எஸ். பேரணி தொடங்கியது. இதில் வெள்ளை, காக்கிநிற சீருடை, கருப்பு நிற தொப்பி அணிந்து ஏராளமானோர் அணிவகுத்து அமைதியான முறையில் சென்றனர். விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து புறப்பட்ட இந்த பேரணி ஆஸ்பத்திரி சாலை, காமராஜர் சாலை, திரு.வி.க. சாலை, நேருஜி சாலை வழியாக விழுப்புரம் பழைய பஸ் நிலையத்தை சென்றடைந்தது. வீதிகளில் பேரணியில் கலந்துகொண்டு வந்தவர்கள் மீது பெண்கள் மலர் தூவி வரவேற்றனர்.

இதைத்தொடர்ந்து நடந்த பொதுக்கூட்டத்தில் காஞ்சி பிரகாஷ் சிறப்புரையாற்றினார். இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர். ஆர்.எஸ்.எஸ். பேரணியை முன்னிட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா தலைமையில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள், துணை போலீஸ் சூப்பிரண்டுகள், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் என 300-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


Next Story