பாதை ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி ஆர்.டி.ஓ. விடம் பொதுமக்கள் மனு
தாராபுரம் அருகே பாதை ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி சோமனூத்து பொதுமக்கள் ஆர்.டி.ஓ. செந்தில் அரசனிடம் மனு கொடுத்தனர்.
பாதை ஆக்கிரமிப்பு
தாராபுரம் அருகே உள்ள சோமனூத்து மேற்கு அரிஜன காலனியில் 45 குடும்பங்களில் சுமார் 300-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். தாராபுரம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தாலூகா செயலாளர் என்.கனகராஜ் தலைமையில் பொதுமக்கள் சார்பில் ஆர்.டி.ஓ. செந்தில் அரசனிடம் ஒரு மனு அளிக்கப்பட்டுள்ளது. அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
ஆர்.டி.ஓ.விடம் மனு
தாராபுரம் தாலுகா, சின்னக்காம்பாளையம் பேரூராட்சி சோமனூத்தில் உள்ள மேற்கு அரிசன காலனி அருகில் சாலை உள்ளது. இந்த சாலை வழியாகவே ஊருக்குள் செல்லமுடியும். இந்த நிலையில் அதே ஊரை சேர்ந்த கனகு என்பவர் தனது சொந்த பயன்பாட்டுக்காக பொதுமக்கள் பயன்படுத்தும் சாலையில் கழிவுநீர் கால்வாய் கட்டுவதற்காக 4 அடி வரை ஆக்கிரமிப்பு செய்துள்ளார். இதனால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கவேண்டும் இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மனுவை பெற்றுக்கொண்ட ஆர்.டி.ஓ. செந்தில் அரசன் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.