நெல்லையை வறட்சி மாவட்டமாக அறிவிக்க ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. கோரிக்கை


நெல்லையை வறட்சி மாவட்டமாக அறிவிக்க ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. கோரிக்கை
x

நெல்லையை வறட்சி மாவட்டமாக அறிவிக்க ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. கோரிக்கை விடுத்துள்ளார்.

திருநெல்வேலி

இட்டமொழி:

தமிழக காங்கிரஸ் கமிட்டி பொருளாளரும், நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினருமான ரூபி மனோகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

தாமிரபரணி தவழ்ந்தோடி வளம் சேர்த்த நெல்லை மாவட்டத்தில் எப்போதும் இல்லாத வறட்சி இப்போது ஏற்பட்டு இருக்கிறது. என்னுடைய நாங்குநேரி சட்டமன்ற தொகுதியிலும் கடுமையான வறட்சி நிலவி வருகிறது. பல இடங்களில் தண்ணீர் பிரச்சினை தலைவிரித்தாடுகிறது. குடிநீருக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. விவசாயிகளின் நிலை இன்னும் மோசமாக இருக்கிறது. ஏரி, குளங்களில் மட்டுமல்ல, கிணறுகளிலும் தண்ணீர் இல்லை. நிலத்தடி நீர்மட்டம் அதலபாதாளத்துக்கு போய்விட்டது. விவசாயிகள் பயிர் செய்துள்ள வாழை, நெல் உள்ளிட்ட பயிர்கள் கருகி கிடக்கின்றன. கடன் வாங்கி விவசாயம் செய்த விவசாயிகள், எதிர்காலம் என்ன ஆகுமோ என்கிற அச்சத்தில் இருக்கிறார்கள். மொத்தத்தில் கடந்த பல ஆண்டுகளில் எப்போதுமே இல்லாத வறட்சி இப்போது இங்கே தலைதூக்கி இருக்கிறது. அதனால் நெல்லை மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க தமிழக முதல்-அமைச்சரும், மாவட்ட கலெக்டரும் நடவடிக்கை எடுக்க வேண்டும். வறட்சியினாலும், குடிநீர் பிரச்சினைகளாலும் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் உரிய நிவாரணம் வழங்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


Next Story