உலக நன்மைக்காக மகா ருத்ர யாகம்


உலக நன்மைக்காக மகா ருத்ர யாகம்
x
தினத்தந்தி 3 Dec 2022 12:15 AM IST (Updated: 3 Dec 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

ஓசூரில் உலக நன்மைக்காக மகா ருத்ர யாகம் நடந்தது.

கிருஷ்ணகிரி

ஓசூர்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில், ஓசூர் பக்த ஜன சபா சார்பில் 19-வது ஆண்டு சாஸ்தா பிரீத்தி மற்றும் அய்யப்பன் பூஜை ஓசூர்-பஸ்தி சாலையில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் கடந்த 28-ந் தேதி தொடங்கியது. இந்த பூஜை நாளை (ஞாயிற்றுக்கிழமை) வரை நடக்கிறது. தினமும் திருமுறை விண்ணப்பம், ராம நாம தாரக மந்திர ஜெபம், பஞ்சாட்ச மந்திர ஜெபம், அய்யப்ப சாமி பஜனைகள், ராமாயணம், மகாபாரதம், பாகவதம், நாராயணீயம் மற்றும் பகவத் கீதை உள்ளிட்ட பக்தி சொற்பொழிவு நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று, உலக நன்மைக்காக மகா ருத்ர யாகம் நடைபெற்றது. மகா கணபதி ஹோமத்துடன் தொடங்கிய யாகத்தில் 121 குருக்கள் பங்கேற்று, தொடர்ந்து 8 மணி நேரம் ருத்ர யாகத்தை நடத்தினர். இந்த மகா ருத்ர யாகத்தில் 1,008 ருத்ர பாராயணம் வைபவமும் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


Next Story