தருமை ஆதீனம் அணிவித்த ருத்ராட்ச மாலை: மறுப்பு தெரிவிக்காமல் அணிந்து கொண்ட முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின்


தருமை ஆதீனம் அணிவித்த ருத்ராட்ச மாலை: மறுப்பு தெரிவிக்காமல் அணிந்து கொண்ட முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின்
x
தினத்தந்தி 6 Jan 2023 8:57 AM IST (Updated: 6 Jan 2023 10:29 AM IST)
t-max-icont-min-icon

முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் ருத்ராட்ச மாலையை அணிந்து கொண்டது ஆன்மிகவாதிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

சென்னை,

தருமை ஆதினம் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பொன்னாடை போர்த்தி ருத்ராட்ச மாலை அணிவித்தார். அதற்கு மறுப்பு தெரிவிக்காமல் ருத்ராட்ச மாலையை முதலமைச்சர் ஸ்டாலின் அணிந்து கொண்டது ஆன்மிகவாதிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

தொடர்ந்து, தருமை ஆதீனம் மவுன விரதம் என்பதால், அவருடைய வாழ்த்து செய்தியை குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் வாசித்தார். அப்போது, ருத்ராட்ச மாலையை முதல்வர் ஏற்றுக்கொண்டதில் கடவுள் நம்பிக்கை உள்ளவர்களின் மனதை புண்படுத்தக்கூடாது என்ற கொள்கை வெளிப்பட்டதாக தெரிவித்தார்.


Next Story