வாறுகால், பேவர்பிளாக் சாலைஅமைக்கும் பணி தொடக்கம்


வாறுகால், பேவர்பிளாக் சாலைஅமைக்கும் பணி தொடக்கம்
x
தினத்தந்தி 18 May 2023 12:15 AM IST (Updated: 18 May 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

இடைசெவல் கிராமத்தில் வாறுகால், பேவர்பிளாக் சாலை அமைக்கும் பணி தொடங்கியது.

தூத்துக்குடி

கோவில்பட்டி:

கோவில்பட்டி அருகே உள்ள இடைசெவல் கிராமம் ஆதிதிராவிடர் கிழக்கு காலனியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.10 லட்சம் செலவில் வாறுகால் மற்றும் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணி தொடக்க விழா நிகழ்ச்சி நேற்று நடந்தது. நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ.கலந்து கொண்டு பூமி பூஜையை நடத்தி பணியை தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் கோவில்பட்டி பஞ்சாயத்து யூனியன் ஆணையாளர் ராஜேஷ் குமார், பஞ்சாயத்து யூனியன் துணை தலைவர் பழனிச்சாமி, பஞ்சாயத்து தலைவர் ரெங்கநாயகி மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர்.


Next Story