விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த ஆட்சியாளர்கள் எதுவும் செய்யவில்லை - எடப்பாடி பழனிசாமி விமர்சனம்
திமுக ஆட்சிக்கு வந்தவுடன் முதியோர் உதவித் தொகை பல இடங்களில் நிறுத்தப்பட்டுவிட்டது. என பேசினார்
சேலத்தில் நடைபெற்ற தொழிற்சங்க உரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு இணையும் விழாவில் நடைபெற்றது. இதில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு பேசினார்.
அவர் கூறியதாவது ,
நாட்டின் முதுகெலும்பாக தொழிலாளர்கள் திகழ்கின்றனர். தொழிலாளர்களின் கடும் உழைப்பால்தான் நாடு முன்னேறி வருகிறது. மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்தவுடன் கட்டுமான தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்த்தப்படும்.
விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த ஆட்சியாளர்கள் எதுவும் செய்யவில்லை.இல்லத்தரசிகளுக்கு ரூ.1000 வழங்கும் திட்டத்தில் பல்வேறு நிபந்தனைகள் விதிக்கின்றனர் .
அதிமுக ஆட்சியில் 5 லட்சம் முதியோருக்கு புதிதாக உதவித் தொகை வழங்கப்பட்டது. 90 சதவீதம் பேருக்கு முதியோர் உதவித் தொகை வழங்கப்பட்டது. ஆனால் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் தமிழகத்தில் முதியோர் உதவித் தொகை பல இடங்களில் நிறுத்தப்பட்டுவிட்டது. என பேசினார்