சாலை விதிகளை அனைவரும் பின்பற்ற கலெக்டர் வேண்டுகோள்


சாலை விதிகளை அனைவரும் பின்பற்ற   கலெக்டர் வேண்டுகோள்
x

இந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் வரை சாலை விபத்துகளில் 249 பேர் பலியாகி இருக்கிறார்கள். எனவே அனைவரும் விதிகளை பின்பற்ற வேண்டும் என்று ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானிடாம்வர்கீஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ராமநாதபுரம்


இந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் வரை சாலை விபத்துகளில் 249 பேர் பலியாகி இருக்கிறார்கள். எனவே அனைவரும் விதிகளை பின்பற்ற வேண்டும் என்று ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானிடாம்வர்கீஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

249 பேர் சாவு

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த ஜனவரி முதல் ஆகஸ்டு வரை 233 வாகன விபத்துக்கள் மூலம் 249 பேர் உயிரிழந்து உள்ளனர். இதில் 98 இருசக்கர வாகன விபத்துகளால் 101 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்துகளில் 99 சதவீதம் இருசக்கர வாகனத்தில் பயணித்தவர்கள் தலைக்கவசம் அணியாமல் சென்றதால் தான் உயிரிழப்பு ஏற்பட்டு உள்ளது. பொதுவாக பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சி மூலம் தலைக்கவசம் அணிய வேண்டும். அதுதான் உயிர் கவசம் என விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் நிலையில் கூட இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் தலைக்கவசம் அணியாமல் செல்வதை தவிர்த்து இனி கட்டாயம் தலைக்கவசம் அணிந்து இரு சக்கர வாகனத்தை பயன்படுத்த வேண்டும்.

சாலை விதிகளை பின்பற்ற வேண்டும்

இது போன்ற விபத்துக்களால் உயிரிழந்தவர்களின் நிலை அவர்களோடு முடிவதில்லை. அவர்களுக்கு பின்னால் அவர்களின் குடும்பம் எந்த அளவிற்கு பாதிக்கப்படும் என்பதை உணர்ந்தாலே ஒவ்வொருவரும் தலைக்கவசம் அணிந்து வாகனத்தை பாதுகாப்பாக பயன்படுத்தி பாதுகாப்புடன் சென்றிடலாம்.

எனவே அரசின் விதிமுறைகளை கடைபிடித்து நான்கு சக்கர வாகனம் ஓட்டுபவர்கள் உரிய வேகத்தில் செல்வதும், இருசக்கர வாகனம் ஓட்டுபவர்கள் தலைக்கவசம் அணிந்து மிதமான வேகத்தில் செல்வதும் அதைபோல் சாலையை கடந்து நடந்து செல்லக் கூடியவர்கள் அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே சாலையை கடப்பது என சாலை விதிகளை கடைபிடித்து பாதுகாப்பான பயணத்தை மேற்கொண்டு பாதுகாப்புடன் இருக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


Related Tags :
Next Story