நடுவானில் தீர்ந்த எரிப்பொருள்...! சென்னையில் அவசரமாக தரையிறக்கப்பட்ட ஆஸ்திரேலிய விமானம்
டெல்லி கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் சென்னை விமான நிலையத்தில் தரையிறக்க உத்தரவிட்டனர்.
சென்னை,
ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் இருந்து டெல்லிக்கு சென்ற விமானம் எரிப்பொருள் குறைவால் சென்னையில் தரையிறக்கப்பட்டது. மெல்போர்ன் நகரில் 277 பயணிகளுடன் டெல்லிக்கு புறப்பட்ட விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது எரிபொருள் குறைவாக இருந்தது தெரியவந்தது.
இதனை அறிந்த டெல்லி கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் விமானத்தை சென்னை விமான நிலையத்தில் தரையிறக்க உத்தரவிட்டனர். சென்னை விமான நிலையத்தில் எரிபொருள் நிரப்பிய பிறகு 1 மணி நேரம் தாமதமாக விமானம் புறப்பட்டு சென்றது.
Related Tags :
Next Story