மகளிர் தின விழாவில் மூதாட்டிகள் பங்கேற்ற ஓட்டப்பந்தய போட்டி


மகளிர் தின விழாவில் மூதாட்டிகள் பங்கேற்ற ஓட்டப்பந்தய போட்டி
x

காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூர் அருகே விளையாட்டு போட்டியில் இளம்பெண்கள் முதல் 75 வயதுடைய மூதாட்டிகள் என 300- க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

காஞ்சிபுரம்

உலக மகளிர் தினத்தையொட்டி காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியம் வைப்பூர் கிராமத்தில் மகளிர்களுக்கான ஓட்டப்பந்தயம், பாட்டுப் போட்டி, கவிதை போட்டி, மியூசிக்கல் சேர் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. வைப்பூர் ஊராட்சி மன்ற தலைவர் சுமதி ராமச்சந்திரன் தலைமை தாங்கி விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைத்தார். விளையாட்டு போட்டியில் இளம்பெண்கள் முதல் 75 வயதுடைய மூதாட்டிகள் என 300- க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு ஊராட்சி மன்ற தலைவர் பரிசுகளை வழங்கினார். இதில் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் பாரதிராஜா, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வசந்தி சந்தானம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

காஞ்சீபுரம் மாவட்டம் படப்பையில் மணிமங்கலம் போலீசார் சார்பில் படப்பை பெண்கள் மேல்நிலை பள்ளியில் மகளிர் தின விழா கேக் வெட்டி சிறப்பாக கொண்டாடப்பட்டது. பெண் போலீசார் மாணவிகளுக்கு கேக் வழங்கி அன்பை வெளிப்படுத்தினர். இதில் மாணவிகள் ஒழுக்கத்துடன் சிறந்து விளங்க வேண்டும். திறமையாக படித்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்பது குறித்து அறிவுரை வழங்கினார். விழாவில் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர்கள் திலீப் குமார், முருகன், பள்ளி ஆசிரியர்கள், பெண் போலீசார் உள்பட பலர் உடன் இருந்தனர்.


Next Story