திருப்பூரில் உரிய ஆவணங்கள் இன்றி செயல்பட்ட தனியார் கிளீனிக்கை பூட்டி அதிகாரிகள் சீல் வைத்தனர்.
திருப்பூரில் உரிய ஆவணங்கள் இன்றி செயல்பட்ட தனியார் கிளீனிக்கை பூட்டி அதிகாரிகள் சீல் வைத்தனர்.
திருப்பூர்
திருப்பூரில் உரிய ஆவணங்கள் இன்றி செயல்பட்ட தனியார் கிளீனிக்கை பூட்டி அதிகாரிகள் சீல் வைத்தனர்.
தனியார் கிளீனிக்
திருப்பூர் கொங்கு மெயின் ரோடு கொடிக்கம்பம் பகுதியில் உள்ள ஹரினி கிளீனிக் உரிய ஆவணங்கள் இன்றி செயல்படுவதாக மாவட்ட மருத்துவத்துறைக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து மாவட்ட மருத்துவத்துறை இணை இயக்குனர் கலாராணி தலைமையில் அதிகாரிகள் கடந்த வாரம் சம்பந்தப்பட்ட கிளீனிக்குக்கு சென்று அதிரடி சோதனை நடத்தினார்கள்.
அப்போது அங்கு ஆவணங்களில் குறிப்பிட்டிருந்த டாக்டர் சிகிச்சை அளிக்காமல் வேறு பெண் ஒருவர் சிகிச்சை அளித்து வந்ததும், ஓமியோபதி படித்து ஆங்கில மருத்துவ சிகிச்சை அளிப்பதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து உடனடியாக அந்த கிளீனிக்கை அதிகாரிகள் மூடினார்கள். மேலும் தகுந்த ஆவணங்களை சமர்ப்பிக்க உத்தரவிட்டனர்.
சீல் வைப்பு
இதைத்தொடர்ந்து சம்பந்தப்பட்ட தனியார் கிளீனிக் நிர்வாகத்தின் தரப்பில் இருந்து ஆவணங்கள் மாவட்ட மருத்துவத்துறை இணை இயக்குனரிடம் சமர்ப்பிக்கப்பட்டது. ஆனால் அவற்றில் முரண்பாடு இருந்தது தெரியவந்தது. இதனால் நேற்று மதியம் இணை இயக்குனர் தலைமையில் அதிகாரிகள் குழுவினர் சென்று கொடிக்கம்பம் பகுதியில் உள்ள ஹரினி கிளீனிக்கை பூட்டி 'சீல்' வைத்தனர்.
இதுகுறித்து மருத்துவத்துறை இணை இயக்குனர் கனகராணி கூறும்போது, 'ஆவணத்தில் குறிப்பிட்டுள்ள டாக்டர் அங்கு சிகிச்சை அளிக்கவில்லை. வேறு ஒருவர் சிகிச்சை அளித்து வந்துள்ளார். மேலும் ஓமியோபதி சிகிக்சை அனுமதிக்கப்பட்ட நிலையில், ஆங்கிலமுறை சிகிச்சையை அவர்கள் மேற்கொண்டுள்ளனர். இதனால் சம்பந்தப்பட்ட கிளீனிக் பூட்டி சீல் வைக்கப்பட்டது. ஆவணங்கள் சரிபார்ப்பு, விசாரணை காரணமாக 'சீல்' வைப்பு நடவடிக்கைக்கு இத்தனை நாள் ஆகிவிட்டது. மேலும் கிளினீக்கின் அனுமதி சான்றும் ரத்து செய்யப்பட்டுள்ளது' என்றார்.
கிளீனிக் அருகில் உள்ள மருந்துக்கடை ஏற்கனவே பூட்டப்பட்டுள்ளது. மருந்து துறை அதிகாரிகள் ஆய்வு செய்து மேல்நடவடிக்கை எடுக்க உள்ளனர்.
---