கோவில்பட்டியில் ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் வேலைநிறுத்தம்
கோவில்பட்டியில் ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடி
கோவில்பட்டி (கிழக்கு):
தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறையில் காலியாக உள்ள அனைத்து நிலையிலான பணியிடங்களையும் உடனடியாக நிரப்பு வேண்டும் உள்ளிட்ட 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோவில்பட்டி யூனியன் அலுவலகத்தில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கத்தினர் நேற்று காலவரையற்ற வேலை நிறுத்தத்தை தொடங்கினர். இந்த அலுவலகத்தில் பணியாற்றும் 2 வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உட்பட 38 பேர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் யூனியன் அலுவலகம் ஊழியர்கள் இல்லாமல் வெறிச்சோடி கிடந்தன. அலுவலக பணிகள் முற்றிலும் முடங்கி போனது. இந்த அலுவலகத்துக்கு வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
Related Tags :
Next Story