ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்
16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அரியலூர்
அரியலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நேற்று தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தினர் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள், ஊரக வளர்ச்சித்துறையில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும், 100 நாள் வேலைத்திட்டத்திற்கு வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் திட்ட அலுவலர் பணியிடத்தை உடனே நிரப்ப வேண்டும் என்பன உள்பட 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதில் சங்கத்தை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதன்காரணமாக ஊரக வளர்ச்சித்துறையில் பணிகள் பாதிக்கப்பட்டன.
Related Tags :
Next Story