விழுப்புரம் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் அலுவலர்களுக்கு கூடுதல் இயக்குனர் ஆனந்தராஜ் அறிவுரை


விழுப்புரம் மாவட்டத்தில்  ஊரக வளர்ச்சித்துறை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்  அலுவலர்களுக்கு கூடுதல் இயக்குனர் ஆனந்தராஜ் அறிவுரை
x

விழுப்புரம் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று அலுவலர்களுக்கு சென்னை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்கக் கூடுதல் இயக்குனர் ஆனந்தராஜ் அறிவுரை கூறினார்.

விழுப்புரம்

விழுப்புரம்,

விழுப்புரம் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் அனைத்து திட்ட வளர்ச்சி பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு சென்னை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்கக் கூடுதல் இயக்குனர் ஆனந்தராஜ் தலைமை தாங்கி ஊரக பகுதிகளில் நடைபெற்று வரும் சுகாதாரம் சார்ந்த தூய்மை பாரத இயக்கம் தொடர்பான பணிகள், ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் வீடுகள்தோறும் வழங்கப்படும் குடிநீர் இணைப்பு பணிகளின் முன்னேற்றம்,

சட்டமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு திட்டம், நாடாளுமன்ற உறுப்பினரின் உள்ளூர் தொகுதி மேம்பாட்டு திட்டம், நமக்கு நாமே திட்டம் மற்றும் ஊரக சாலைப்பணிகள் ஆகிய பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

பணிகளை விரைந்து முடிக்க...

அப்போது கூடுதல் இயக்குனர் ஆனந்தராஜ் கூறுகையில், பிரதம மந்திரியின் ஊரக குடியிருப்பு திட்டத்தில் 2016-17 முதல் 2019-20-ம் ஆண்டு வரையில் நிலுவையில் உள்ள அனைத்து வீடுகளையும் விரைந்து முடிக்கும் பொருட்டு ஊராட்சி ஒன்றியம் வாரியாக இலக்கு நிர்ணயம் செய்து நிர்ணயிக்கப்பட்ட தேதியில் முடித்து இறுதிப்பட்டியல் வழங்க வேண்டும்.

2021-22-ம் ஆண்டில் இதுநாள் வரை அனுமதி வழங்கப்படாத வீடுகளை உடனே அனுமதி ஆணை வழங்கவும், மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் உள்ள அனைத்து பணிகளையும் நிர்ணயிக்கப்பட்ட காலவரையறைக்குள் விரைந்து முடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

இந்த கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சங்கர் மற்றும் செயற்பொறியாளர், உதவி இயக்குனர்கள், உதவி செயற்பொறியாளர்கள், அனைத்து வட்டார மண்டல அலுவலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், உதவி பொறியாளர்கள் கலந்துகொண்டனர்.


Next Story