ஊரக வளர்ச்சித்துறையினர் வேலை நிறுத்த போராட்டம்


ஊரக வளர்ச்சித்துறையினர் வேலை நிறுத்த போராட்டம்
x

திருண்ணாமலை மாவட்டத்தில் 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வளர்ச்சித் துறையினர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை

திருண்ணாமலை மாவட்டத்தில் 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வளர்ச்சித் துறையினர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வேலைநிறுத்த போராட்டம்

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் 16 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி 13-ந் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவிக்கப்பட்டது.

அதன்படி இன்று திருவண்ணாமலை மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்றது.

ஊரக வளர்ச்சித் துறையில் காலியாக உள்ள அனைத்து நிலையிலான பணியிடங்களையும் உடனடியாக நிரப்ப வேண்டும். வளர்ச்சி பணிகளை விரைந்து நிறைவேற்ற பெருகிவரும் மக்கள் தொகையின் அடிப்படையில் ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியங்களை பிரிக்க வேண்டும்.

அனைத்து நிலை பதவி உயர்வுகளையும் உரிய காலத்தில் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்த போராட்டம் நடந்தது.

75 சதவீத அலுவலர்கள்

இந்த வேலை நிறுத்த போராட்டத்தால் ஊரக வளர்ச்சி துறையை சார்ந்த வட்டார வளர்ச்சி அலுவலகம் உள்ளிட்ட அலுவலகங்கள் அலுவலர்கள் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது. இதனால் பல்வேறு கோரிக்கைகளுக்காக வட்டார வளர்ச்சி அலுவலகம் உள்ளிட்ட அலுவலகங்களுக்கு வந்த பொதுமக்கள் மிகவும் அவதியடைந்தனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் நடந்த இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் 75 சதவீத அலுவலர்கள் ஈடுபட்டு உள்ளதாக சங்க நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

மேலும் இதுகுறித்து மாவட்ட தலைவர் அண்ணாமலை கூறுகையில், கோரிக்கைகளை வலியுறுத்தி அரசுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் காலவரையற்ற வேலை நிறுத்தம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு நாளை (வியாழக்கிழமை) முதல் வழக்கம் போல் அலுவலர்கள் பணிக்கு திரும்ப உள்ளதாக தெரிவித்தார்.

ஆரணி

மேற்கு ஆரணி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார கிளை தலைவர் எஸ்.ஆனந்த் தலைமையில் அனைத்து அலுவலர்களும் விடுப்பு எடுத்து வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் வெறிச்சோடி காணப்பட்டது.

இதேபோல் ஆரணி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும் வட்டார தலைவர் மு.தென்னரசு தலைமையில் அனைத்து அலுவலர்களும் விடுப்பு எடுத்து வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டதால் அலுவலகம் வெறிச்சோடி காணப்பட்டது.

இதனால் அலுவலகத்திற்கு வந்த பொதுமக்கள் அங்கு அலுவலர்கள் இல்லாததால் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

வேலை நிறுத்த போராட்டத்தில் மாவட்ட இணை செயலாளர் இல.பாஸ்கரன், வட்ட செயலாளர்கள் தேவராஜ், விஜயகுமார் பொருளாளர்கள் ஜானகிராமன், கற்பகம், மாவட்ட செயற்குழு உறுப்பினர் திவாகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கீழ்பென்னாத்தூர்

கீழ்பென்னாத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர் சங்கம் சார்பில் வேலை நிறுத்த போராட்டம் நடந்தது.

இதன் காரணமாக அலுவலகத்தில் அலுவலர்கள், ஊழியர்கள் யாரும் பணிக்கு வராத காரணத்தால் வெறிச்சோடி காணப்பட்டன. இதனால் வழக்கம்போல் அலுவலகத்திற்கு வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.


Related Tags :
Next Story