ஊரக உள்ளாட்சி இடைத்தேர்தல்: ஒரே நாளில் 12 பேர் வேட்பு மனுதாக்கல்


ஊரக உள்ளாட்சி இடைத்தேர்தல்: ஒரே நாளில் 12 பேர் வேட்பு மனுதாக்கல்
x

ஊரக உள்ளாட்சி இடைத்தேர்தலில் புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒரே நாளில் 12 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். நாளை மறுநாள் (திங்கட்கிழமை) கடைசி நாளாகும்.

புதுக்கோட்டை

மாவட்ட கவுன்சிலர்

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சிகளில் காலியாக உள்ள பதவியிடங்களுக்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது. புதுக்கோட்டை மாவட்டத்தில் மாவட்ட ஊராட்சி வார்டு எண் 7 மற்றும் அன்னவாசல் ஊராட்சி ஒன்றியம் வெட்டுக்காடு, அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியம் மேலப்பட்டு, அரிமளம் ஊராட்சி ஒன்றியம் நெடுங்குடி, குன்றாண்டார்கோவில் ஊராட்சி ஒன்றியம் தென்னங்குடி மற்றும் புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் தொண்டைமான் ஊரணி ஆகிய 5 கிராம ஊராட்சி தலைவர் பதவியிடங்களுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது.

இதேபோல் கிராம ஊராட்சிகளில் அரசா்குளம் கீழ் பாதியில் 8-வது வார்டு உறுப்பினருக்கும், கல்லூரில் 6-வது வார்டு உறுப்பினருக்கும், மிரட்டுநிலையில் 1-வது வார்டு உறுப்பினருக்கும், வன்னியம்பட்டியில் 1-வது வார்டு உறுப்பினருக்கும், சட்டியக்குடியில் 8-வது வார்டு உறுப்பினருக்கும், திருப்பெருந்துறையில் 3-வது வார்டு உறுப்பினருக்கும், முதுகுளத்தில் 4-வது வார்டு உறுப்பினருக்கும் தேர்தல் நடைபெற உள்ளது.

வார்டு உறுப்பினர்

மேலும் துருசுபட்டியில் 3-வது வார்டு உறுப்பினருக்கும், ஒடுகம்பட்டியில் 3-வது வார்டு உறுப்பினருக்கும், கீழமஞ்சக்குடியில் 11-வது வார்டு உறுப்பினருக்கும், விச்சூரில் 4-வது வார்டு உறுப்பினருக்கும், ஏனாதியில் 4-வது வார்டு உறுப்பினருக்கும், எம்.உசிலம்பட்டியில் 4-வது வார்டு உறுப்பினருக்கும், மறவாமதுரையில் 8-வது வார்டு உறுப்பினருக்கும், மேலதானியத்தில் 9-வது வார்டு உறுப்பினருக்கும், முள்ளிப்பட்டியில் 2-வது வார்டு உறுப்பினருக்கும், தூத்தூரில் 2-வது வார்டு உறுப்பினருக்கும், சேதுராப்பட்டியில் 5-வது வார்டு உறுப்பினருக்கும், தெட்சிணாபுரத்தில் 2-வது வார்டு உறுப்பினருக்கும், வேப்பங்குடியில் 9-வது வார்டு உறுப்பினருக்கும், தென்னந்திரையன்பட்டியில் 9-வது வார்டு உறுப்பினருக்கும் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 20-ந் தேதி தொடங்கியது. இதுவரை மாவட்டத்தில் தேர்தல் நடைபெறும் பதவிகளுக்கு மொத்தம் 14 பேர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர்.

12 பேர் வேட்பு மனு தாக்கல்

இந்த நிலையில் நேற்று கிராம ஊராட்சி தலைவர்கள் பதவியிடங்களுக்கு 7 பேரும், வார்டு உறுப்பினர்கள் பதவிகளுக்கு 5 பேரும் என 12 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். மாவட்ட கவுன்சிலர் 7-வது வார்டு பதவிக்கு நேற்று யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை. காலியாக உள்ள 28 பதவிகளுக்கு இதுவரை 26 பேர் வேட்பு மனுதாக்கல் செய்துள்ளனர். வேட்பு மனு தாக்கல் இன்றும் (சனிக்கிழமை) உண்டு. நாளை (ஞாயிற்றுக்கிழமை) விடுமுறை தினமாகும். வேட்பு மனு தாக்கல் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) கடைசி நாளாகும். வேட்பு மனுக்கள் பரிசீலனை 28-ந் தேதி நடைபெறும். வேட்பு மனுக்களை திரும்ப பெற 30-ந் தேதி கடைசி நாளாகும். போட்டியுள்ள பதவியிடங்களுக்கு வருகிற 9-ந் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறும்.


Next Story