ஊரக உள்ளாட்சி இடைத்தேர்தல்: 36 பேர் மனு தாக்கல்
ஊரக உள்ளாட்சி இடைத்தேர்தலில் இதுவரை 36 பேர் மனு தாக்கல் செய்தனர்.
புதுக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சியில் காலி பதவியிடங்களுக்கு வருகிற 9-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 20-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. புதுக்கோட்டையில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மாவட்ட கவுன்சிலர் 7-வது வார்டு மற்றும் தொண்டைமான் ஊரணி ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு நேற்று யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை. மாவட்டத்தில் கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கு 3 பேரும், வார்டு உறுப்பினர் பதவிக்கு 7 பேரும் என நேற்று 10 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். மாவட்டத்தில் 28 பதவிகளுக்கு இதுவரை மொத்தம் 36 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். வேட்பு மனு தாக்கலுக்கு நாளை (திங்கட்கிழமை) கடைசி நாளாகும். 28-ந் தேதி வேட்பு மனுக்கள் பரிசீலனை நடைபெறும். வேட்பு மனுவை திரும்ப பெற வருகிற 30-ந் தேதி கடைசி நாளாகும்.
Related Tags :
Next Story