கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீடு சிறப்பு முகாம்


கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீடு சிறப்பு முகாம்
x

திருவண்ணாமலை கோட்ட அளவிலான கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீடு சிறப்பு முகாம் நடந்தது.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை கோட்ட அளவிலான கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீடு சிறப்பு முகாம் திருவண்ணாமலையில் நடந்தது. திருவண்ணாமலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் ரங்கராஜன் தலைமை தாங்கினார்.

சிறப்பு அழைப்பாளராக அஞ்சலக சென்னை நகர மண்டல தலைவர் நடராஜன் கலந்து கொண்டு பேசுகையில், அஞ்சல் ஊழியர்கள் அஞ்சல் காப்பீடு பொது மக்களுக்கு வழங்குவதை சமூகத்திற்கு ஆற்றும் சேவையாக கருதி செயல்படுமாறு கேட்டு கொண்டார்.

மேலும் சென்னை கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீடு பிரிவு உதவி இயக்குனர் பாபு கலந்து கொண்டு அஞ்சல் காப்பீட்டின் சிறப்பு அம்சங்கள் பற்றி பேசினார்.

முகாமில் திருவண்ணாமலை கோட்டத்தில் ரூ.30 கோடியே 89 லட்சத்திற்கான 1364 புதிய பாலிசிகள் ரூ.36 லட்சத்து 43 ஆயிரத்து 211 பிரீமியத் தொகையுடன் தொடங்கப்பட்டு சாதனை படைக்கப்பட்டது.

மேலும் சென்ற நிதியாண்டில் சிறப்பாக செயல்பட்டு அதிகம் பாலிசிகள் பிடித்தம் செய்த அஞ்சலக ஊழியர்களுக்கும் மற்றும் நேரடி முகவர்களுக்கும் சிறப்பு பரிசுகளை அஞ்சலக சென்னை நகர மண்டல தலைவர் நடராஜன் வழங்கினார்.

இதில் உதவி கோட்ட கண்காணிப்பாளர்கள் பிரதீபா, கார்த்திகேயன், உட்கோட்ட ஆய்வாளர்கள் சவுடிராஜன், ஜெயபாரதி உள்பட 200-க்கும் மேற்பட்ட அஞ்சலக ஊழியர்கள் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story