கிராமிய அஞ்சல் ஊழியர்கள் வேலை நிறுத்தம்


கிராமிய அஞ்சல் ஊழியர்கள் வேலை நிறுத்தம்
x

10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கிராமிய அஞ்சல் ஊழியர்கள் நேற்று வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை

10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கிராமிய அஞ்சல் ஊழியர்கள் நேற்று வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர்கள் சங்கம் மற்றும் தேசிய கிராமிய அஞ்சல் ஊழியர்கள் சங்கம் சார்பில் நாடு தழுவிய அளவில் ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி திருவண்ணாமலை கோட்டத்தில் நேற்று ஊழியர்கள் வேலைநிறுத்தம் செய்தனர். இதனையொட்டி திருவண்ணாமலை தலைமை அஞ்சல் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கோட்டச் செயலாளர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார்.

இதில் கலந்து கொண்டவர்கள், ''கிராமிய அஞ்சல் ஊழியர்களுக்கு 8 மணி நேரம் வேலை வழங்கி பென்சன் உள்ளிட்ட சலுகைகள் கிடைக்க இலாக ஊழியர் அந்தஸ்து வழங்க வேண்டும். சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும். பகுதிநேரம் பணியாற்றும் வெளி ஆட்களை காலி பணியிடங்களில் நிரப்ப வேண்டும். பணியின் போது உயிரிழக்கும் கிராமிய அஞ்சல் ஊழியர்களின் வாரிசுகளுக்கு எவ்வித நிபந்தனையுமின்றி கருணை அடிப்படையில் பணி வழங்க வேண்டும்'' என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் திருவண்ணாமலை கோட்டத்தை சேர்ந்த 750-க்கும் மேற்பட்டோர் பங்கு பெற்றனர்.


Next Story