கிராமிய அஞ்சல் ஊழியர் சங்கத்தினர் வேலை நிறுத்த போராட்டம்


கிராமிய அஞ்சல் ஊழியர் சங்கத்தினர் வேலை நிறுத்த போராட்டம்
x

கிராமிய அஞ்சல் ஊழியர் சங்கத்தினர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ராணிப்பேட்டை

அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர் சங்கத்தின் சார்பில் ராணிப்பேட்டை தலைமை தபால் நிலையம் முன்பு 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டம் மாவட்ட தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் நடைபெற்றது. ஜி.டி.எஸ். ஊழியர்களுக்கு 8 மணி நேர வேலை, பென்ஷன் வழங்க வேண்டும், கமலேஷ் சந்திரா கமிட்டியின்படி மூன்று கட்ட பதவி உயர்வு, 180 நாட்கள் சேமிப்பு விடுப்பு, ரூ.5 லட்சம் பணிக்கொடை, மருத்துவ காப்பீடு, குழு காப்பீடு வசதிகளை வழங்க வேண்டும். இலக்கு நிர்ணயித்து கட்டாயப்படுத்துவதை கைவிட வேண்டும். பணியின் போது உயிரிழந்த ஜி.டி.எஸ். ஊழியர்களின் வாரிசுகளுக்கு எவ்வித நிபந்தனையும் இன்றி கருணை அடிப்படையில் பணி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இந்த போராட்டத்தில் மாவட்ட செயலாளர் சாமிநாதன், பொருளாளர் எத்திராஜ் உள்பட கிராமிய அஞ்சலக ஊழியர்கள் பலர் பங்கேற்றனர்.


Next Story