கள் இறக்க அனுமதிக்க வேண்டும்


கள் இறக்க அனுமதிக்க வேண்டும்
x
தினத்தந்தி 10 Sep 2023 6:45 PM GMT (Updated: 10 Sep 2023 6:45 PM GMT)

தென்னை, பனை மரங்களில் இருந்து கள் இறக்க அனுமதிக்க வேண்டும் என்று மயிலாடுதுறையில் தமிழ்நாடு கள் இயக்க கள ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி கூறினார்.

மயிலாடுதுறை


தென்னை, பனை மரங்களில் இருந்து கள் இறக்க அனுமதிக்க வேண்டும் என்று மயிலாடுதுறையில் தமிழ்நாடு கள் இயக்க கள ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி கூறினார்.

பேட்டி

மயிலாடுதுறையில் தமிழ்நாடு கள் இயக்க கள ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

தமிழகத்துக்கான காவிரி நீர் பிரச்சினைக்கு ஒருபோதும் தீர்வுகான முடியாது. கர்நாடகாவின் வடிகாலாகத்தான் தமிழகம் இதுவரை இருந்து வருகிறது. காவிரி நீர் தினந்தோறும் பங்கீடு செய்யும் நடைமுறையை அமல்படுத்தினால்தான் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும். பனை மற்றும் தென்னங்கள் இறக்குவதற்கு அரசு தடைவிதித்துள்ளது.

மதுபானங்கள் குடித்தால் கேடு இல்லையா? கள் குடித்தால் கேடுவிளைவிக்கிறது. அதில் கலப்படம் இருப்பதாக தெரிவிக்கிறார்கள். எந்த உணவுப்பொருட்களில் கலப்படம் இல்லாமல் இருந்து வருகிறது. கலப்படத்தை கட்டுப்படுத்த வேண்டியது அரசின் கடமை. அன்டை மாநிலங்களில் கலப்படங்கள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. 48 நாட்கள் ஒரு மரத்து கள்ளை அருந்தினால் பல நோய்கள் நீங்கும்.

கள் இறக்க அனுமதி...

அப்படி ஒரு மரத்தின் கள் கிடைக்காது. பலமரத்தில் இருந்துதான் பெறமுடியும். பனை, தென்னை, ஈச்ச மரங்களில் இருந்து நீராகவோ, பதநீராகவோ, கள்ளாகவோ இறக்க அனுமதித்து அதனை மதிப்பு கூட்டிய பொருளாக மாற்றி தமிழகம் மட்டுமின்றி வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்தால் தமிழகத்திற்கு அன்னியவருவாய் கிடைக்கும்.தமிழகத்தின் பொருளாதர நிலையும் உயரும். விவசாய பொருட்களுக்கு உரிய விலை கிடைக்காமல் ஏற்றத்தாழ்வு ஏற்படுவதற்கு காரணம், விவசாய உற்பத்தி செய்ய வேண்டியதற்கான இலக்கு, புள்ளிவிவரங்கள் அரசிடம் இல்லாதது தான் என்றார். பேட்டியின்போது காவிரி டெல்டா மாவட்ட விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு பொதுச்செயலாளர் ஆறுபாதி கல்யாணம் மற்றும் பலர் உடன் இருந்தனர்.


Next Story