அரசு பஸ் மோதி மொபட்டில் சென்றவர் பலி


அரசு பஸ் மோதி மொபட்டில் சென்றவர் பலி
x

பள்ளிபாளையம் அரசு பஸ் மோதி மொபட்டில் சென்றவர் பரிதாபமாக இறந்தார்.

நாமக்கல்

பள்ளிபாளையம்

பள்ளிபாளையம் பெரிய காடு பகுதியைச் சேர்ந்தவர் சேகர் (வயது 52). லேத் பட்டறையில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவருடன் செந்தில்குமார் (41) என்பவர் வேலை செய்தார். இருவரும் நேற்று காலை மொபட்டில் பள்ளிபாளையத்தில் இருந்து வெடியரசம்பாளையம் செல்லும் ரோட்டில் சென்று கொண்டிருந்தனர். சேகர் மொபட்டை ஓட்டி சென்றார். அப்போது ஈரோட்டில் இருந்து சேலம் நோக்கி வந்த அரசு பஸ் எதிர்பாராதவிதமாக மொபட் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட சேகரும், செந்தில்குமாரும் படுகாயம் அடைந்தனர். இதை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் சேகரை மீட்டு சிகிச்சைக்காக பள்ளிபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவர் செல்லும் வழியிலேயே பாிதாபமாக இறந்தார். காயம் அடைந்த செந்தில்குமார் ஈரோடு அரசு மருத்துமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து சேகரின் மகன் சுரேந்திரன் (23) பள்ளிபாளையம் போலீசில் புகார் கொடுத்தார். இதன் பேரில் பள்ளிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அரசு பஸ் டிரைவர் முருகேசனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story