குழித்துறை தாமிரபரணி ஆற்றில் 28-ந் தேதி பலி தர்ப்பணம் நிகழ்ச்சி


குழித்துறை தாமிரபரணி ஆற்றில் 28-ந் தேதி பலி தர்ப்பணம் நிகழ்ச்சி
x

ஆடி அமாவாசையை முன்னிட்டு குழித்துறை தாமிரபரணி ஆற்றில் வருகிற 28-ந் தேதி பலி தர்ப்பணம் நிகழ்ச்சி நடக்கிறது. இதற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கன்னியாகுமரி

குழித்துறை,

ஆடி அமாவாசையை முன்னிட்டு குழித்துறை தாமிரபரணி ஆற்றில் வருகிற 28-ந் தேதி பலி தர்ப்பணம் நிகழ்ச்சி நடக்கிறது. இதற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

வாவுபலி பொருட்காட்சி

குழித்துறை நகராட்சி சார்பில் தாமிரபரணி ஆற்றின் கரையில் 97-வது வாவுபலி பொருட்காட்சி கடந்த 13-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த பொருட்காட்சி வருகிற 1-ந் தேதி வரை 20 நாட்கள் நடக்கிறது.

பல விதமான பக்க காட்சிகள் மற்றும் பொழுது போக்கு அம்சங்களை கொண்ட இந்த வாவுபலி கண்காட்சியை தினம் ஏராளமானோர் கண்டு களித்து செல்கிறார்கள்.

ஆடி அமாவாசை நாளான வருகிற 28-ந் தேதி குழித்துறை தாமிரபரணி ஆற்றில் முன்னோர்கள் நினைவாக பலி தர்ப்பணம் கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

ஏற்பாடுகள் தீவிரம்

அன்று அதிகாலை முதல் ஏராளமானோர் முன்னோர்களை நினைத்து பலி தர்ப்பணம் கொடுப்பார்கள். அதற்காக புரோகிதர்கள் பலி கர்ம பொருட்களுடன் அங்கு அமர்ந்திருந்து மந்திரம் ஓதி பலி தர்ப்பணம் கொடுக்க வருபவர்களுக்கு பொருட்களை வழங்குவார்கள்.

இந்த நிகழ்ச்சியை முன்னிட்டு குழித்துறை மகா தேவர் கோவில் அருகில் ஆற்றின் கரையையொட்டி பெரிய அளவிலான பந்தல் அமைக்கப்பட்டு வருகி றது. அதுபோல் பலி தர்ப்பணம் செய்ய வரும் பெண்கள் உடைகள் மாற்றுவதற்கான அறைகளும் தயார் செய்யப்பட்டுள்ளன.மேலும் தாமிரபரணி ஆற்றின் படித்துறைகள் மற்றும் சுற்று பகுதிகளை நகராட்சி சார்பில் சீர்ப்படுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.


Next Story