மானாமதுரை அருகே ரெயிலில் அடிபட்டு 4 மான்கள் பலிதண்ணீர் தேடி வந்தபோது பரிதாபம்


மானாமதுரை அருகே ரெயிலில் அடிபட்டு 4 மான்கள் பலிதண்ணீர் தேடி வந்தபோது பரிதாபம்
x
தினத்தந்தி 14 March 2023 12:15 AM IST (Updated: 14 March 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

மானாமதுரை அருகே தண்ணீர் தேடி வந்த 4 மான்கள் ரெயிலில் அடிபட்டு இறந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியது.

சிவகங்கை

மானாமதுரை,

மானாமதுரை அருகே தண்ணீர் தேடி வந்த 4 மான்கள் ரெயிலில் அடிபட்டு இறந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியது.

4 மான்கள்

சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் காட்டுப்பகுதியில் ஏராளமான மான்கள் காணப்படுகின்றன. இந்த மான்கள் கோடைக்காலத்தில் தண்ணீரை தேடி ஊருக்குள் வருகின்றன. இதனால் வாகனங்களில் அடிபட்டும், நாய்கள் கடித்தும் மான்கள் இறக்கும் நிகழ்வுகள் நடக்கின்றன.

இந்தநிலையில் மற்றொரு சம்பவமாக நேற்று மானாமதுரை அருகே கிருங்காக்கோட்டை காட்டுப்பகுதியில் இருந்து 4 மான்கள் தண்ணீரை தேடி ஊருக்குள் வந்தன.

ரெயிலில் அடிபட்டு பலி

தண்டவாளம் பகுதியில் அந்த மான்கள் சுற்றித்திரிந்துள்ளன. அப்போது கன்னியாகுமரியில் இருந்து ராமேசுவரம் நோக்கி வந்த எக்ஸ்பிரஸ் ரெயிலில் அடிபட்டு 4 மான்களும் பலியாகின. இதில் 2 பெண் மான்கள் ஆகும்.

இதுகுறித்து அறிந்ததும் சிவகங்கை வனத்துறையினர் விரைந்து வந்து, பலியான மான் உடல்களை மீட்டு புதைத்தனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:-

முன்பெல்லாம் மான்கள் அதிகம் உள்ள வனப்பகுதியில் ஆங்காங்கே தண்ணீர் தொட்டி கட்டப்பட்டு அதில் தண்ணீர் நிரப்பி வைக்கப்படும். இதனால் மான்கள் வனப்பகுதியை விட்டு வெளியே வருவது அரிதாகவே இருக்கும். ஆனால் தற்போது, தொட்டியில் தண்ணீர் நிரப்பப்படுவதில்லை. இதனால் அடிக்கடி மான்கள் தண்ணீரை தேடி ஊருக்குள் வந்து பலியாகும் நிகழ்வுகள் நடக்கின்றன. இனியாவது தொட்டிகளில் தண்ணீர் நிரப்ப வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story