நிழல் இல்லா தினம் நிகழ்ச்சி


நிழல் இல்லா தினம் நிகழ்ச்சி
x

நிழல் இல்லா தினம் நிகழ்ச்சி நடந்தது.

சிவகங்கை

சிவகங்கை,

தேவகோட்டை அருகே கண்ணங்குடி, காளையார்கோவில், சிவகங்கை, கல்லல், திருப்புவனம், தேவகோட்டை ஆகிய ஒன்றியங்களில் நிழல் இல்லா தின நிகழ்வையொட்டி தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. காளையார்கோவில் ஒன்றியத்தில் உள்ள காளையார்கோவில் அரசு மேல்நிலைப் பள்ளி, கல்லல் ஒன்றியத்தில் உள்ள கோவிலூர் அரசு உயர்நிலைப் பள்ளி, சிவகங்கை ஒன்றியத்தில் உள்ள ஜஸ்டின் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, திருப்புவனம் ஒன்றியத்தில் உள்ள திருப்புவனம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளி மைதானங்களில் நடந்த இந்த நிகழ்ச்சியில் ஏராளமான மாணவ-மாணவிகளும், ஆசிரியர்களும் பூஜ்ஜிய நிழல் தின நிகழ்வை கண்டு ரசித்தனர். காளையார்கோவில் ஒன்றியத்தில் தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட செய லாளர் ஆரோக்கியசாமி, கிளை செயலாளர் ஆரோக்கிய ஜெயசாலமன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் அலெக் சாண்டர்துரை, பாண்டியன், பாஸ்கர், டேவிட், கல்லல் ஒன்றியத்தில் கல்லல் கிளை செயலாளர் பிரபு, கிளைத் தலைவர் ராம்மோகன், கிளை பொருளாளர் கலாவதி, ஸ்டான்லி, சிவகங்கை ஒன்றியத்தில் மாவட்ட கவுரவ தலைவர் சாஸ்தாசுந்தரம், கிளை செயலாளர் ஆனந்த கிருஷ்ணன், அறிவியல் பிரசார மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆரோக்கிய மேரி, திருப்புவனம் ஒன்றியத்தில் மாவட்ட பொருளாளர் ரகுநாதன், கிளைச் செயலாளர் பாலசுப்பிர மணியன், தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு ஒருங்கி ணைப்பாளர் சதீஷ் ஆகியோர் நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்திருந்தனர். காளையார்கோவில் தலைமையாசிரியர் இருதயராஜ், கல்லல் தலைமையாசிரியை கிருஷ்ணகுமாரி, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சந்திரசேகர், வட்டார வள மைய பொறுப்பு மேற்பார்வையாளர் கஸ்தூரிபாய் ஆகியோர் கலந்து கொண்டனர்.


Next Story