தமிழ்நாடு அமைப்பு சாரா ஒட்டுநர் நலவாரியத்தில் பதிவு செய்த ஓட்டுநர்களுக்கு பாதுகாப்பு பெட்டகம்
தமிழ்நாடு அமைப்பு சாரா ஒட்டுநர் நலவாரியத்தில் பதிவு செய்த ஓட்டுநர்களுக்கு பாதுகாப்பு பெட்டகம் வழங்கப்படுகிறது.
தமிழ்நாடு அமைப்பு சாரா ஒட்டுநர் நலவாரியத்தில் பதிவு செய்த ஓட்டுநர்களுக்கு பாதுகாப்பு பெட்டகம் வழங்கப்படுகிறது.
இது குறித்து தூத்துக்குடி தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) நா. முருகப்பிரசன்னா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
பாதுகாப்பு பெட்டகம்
தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறையின் கீழ் தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நலவாரியம் மற்றும் 18 அமைப்புசாரா தொழிலாளர் நலவாரியங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் அமைப்புசாரா ஓட்டுநர்கள் நலவாரியத்தில் பதிவு செய்து தற்போது வரை புதுப்பித்தல் உள்ள ஓட்டுநர்களுக்கு பாதுகாப்பு பெட்டகம் தூத்துக்குடி தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) அலுவலகத்தில் வழங்கப்படுகிறது.
ஆவணங்கள்
இந்த பாதுகாப்பு பெட்டகம் பெற அலுவலகம் வரும் ஓட்டுநர்கள் அசல் நலவாரிய அட்டை, நலவாரிய அட்டை நகல், ஆதார் அட்டை நகல், மின்னணு குடும்ப அட்டை நகல், வங்கி கணக்கு புத்தகத்தின் நகல், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஒன்று ஆகிய ஆவண நகல்களில் தங்களின் தொலைபேசி எண்ணை குறிப்பிட்டு தொழிலாளர் உதவிஆணையர் (சமூகபாதுகாப்புதிட்டம்), ஒருங்கிணைந்த தொழிலாளர் துறை அலுவலக கட்டிடம், கோரம்பள்ளம், தூத்துக்குடி முகவரியில் உள்ள அலுவலகத்தில் சமர்ப்பித்து பாதுகாப்பு பெட்டகத்தை பெற்றுச் செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.