பட்டாசு தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்


பட்டாசு தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்
x

விருதுநகர் அருகே பட்டாசு தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு விழிப்புணர்வு முகாமினை கலெக்டர் தொடங்கி வைத்தார்.

விருதுநகர்


விருதுநகர் அருகே பட்டாசு தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு விழிப்புணர்வு முகாமினை கலெக்டர் தொடங்கி வைத்தார்.

விழிப்புணர்வு முகாம்

விருதுநகர் அருகே உள்ள தனியார் கல்லூரியில் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்கத்தின் சார்பில் பட்டாசு உற்பத்தி தொழிலாளர்களுக்கான பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. முகாமினை தொடங்கி வைத்தும் பாதுகாப்பு கையேட்டினை வெளியிட்டும் கலெக்டர் ஜெயசீலன் பேசியதாவது:-

தமிழ்நாடு அரசு பட்டாசு தொழிற்சாலைகளில் விபத்தில்லா உற்பத்தி மேற்கொள்ளும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு முகாம்களை கருத்தரங்கை தொடர்ச்சியாக நடத்த அறிவுறுத்தியுள்ளது. பட்டாசு உற்பத்தி தொழில் 50 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வருகிறது. இதன் மூலம் பல்வேறு மக்களுக்கு வேலைவாய்ப்பும் நாட்டின் பொருளாதாரத்தின் மிகப்பெரிய பங்களிப்பையும் இந்த தொழில் வழங்கி வருகிறது.

நடவடிக்கை

பட்டாசு தொழிலாளர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டுதான் விழிப்புணர்வு முகாம், கருத்தரங்கு நடைபெறுகிறது. பெரும்பாலான பட்டாசு விபத்துக்கள் தவிர்க்க கூடியவை ஆகும். ஆனால் மனிதத்தவறுகளால் நடைபெறுகிறது. சிறு தவறுகளால் ஏற்படும் விபத்தினால் உண்டாகக்கூடிய பாதிப்புகள், பின் விளைவுகளால் உயிரிழப்புகளும், பொருளாதார இழப்புகளும் ஏற்படுகிறது. இந்த பயிற்சி வகுப்பு என்பது எதிர்காலத்தில் ஏற்படும் ஆபத்தினை தடுக்கும் ஒரு முதலீடு ஆகும். பல்வேறு வளர்ச்சி முன்னேற்றங்களுக்கு காரணம் தொழிலாளர்கள் தான். அத்தகைய தொழிலாளர்கள் தங்களை பாதுகாத்துக் கொள்வது மிகவும் அவசியம். பட்டாசு தொழிலாளர்கள் இந்த முகாமினை நல்ல முறையில் பயன்படுத்திக் கொண்டு அரசு மூலம் பட்டாசு விபத்தினை தடுப்பதற்கு எடுக்கப்படும் அனைத்து முயற்சிகளுக்கும் நடவடிக்கைகளுக்கும் உறுதுணையாக இருந்து விபத்தில்லா மாவட்டமாக உருவாக்குவதற்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

முகாமில் தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்கக இணை இயக்குனர்கள் வேல்முருகன், ரவிச்சந்திரன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story