பெண் தொழிலாளர்களுக்கான பாதுகாப்பு விழிப்புணர்வு கையெழுத்து பிரசாரம்


பெண் தொழிலாளர்களுக்கான பாதுகாப்பு விழிப்புணர்வு கையெழுத்து பிரசாரம்
x

பெண் தொழிலாளர்களுக்கான பாதுகாப்பு விழிப்புணர்வு கையெழுத்து பிரசாரம் நடைபெற்றது.

கரூர்

தமிழகத்தில் பெண் தொழிலாளர்களுக்கு பணியிடங்களில் பாதுகாப்பு, 8 மணி நேரம் வேலை, பாலியல் தொல்லை இல்லாதநிலை, அதிகபட்ச நேரம் வேலை செய்தால் சட்டப்படியான கூலி, பணி நிரந்தரம், தங்குமிடங்களில் பாதுகாப்பு சட்டம், மருத்துவ வசதி, விடுதிகளில் சத்தான உணவு, சுகாதாரமான விடுதி அறைகள் மற்றும் கழிப்பறைகள், ஊதியத்துடன் கூடிய அரசு விடுமுறை, உடல் நலக்குறைவு ஏற்பட்டால் உடனே வீட்டிற்கு செல்ல அனுமதி, வேலை பழகுனர் என்று பல ஆண்டுகளாக வேலையில் வைத்திருப்பது கூடாது, சட்ட சலுகைகளான பணிக்கொடை வருங்கால வைப்பு நிதி, தொழிலாளர் காப்புறுதி, விபத்து காப்பீடு மற்றும் இழப்பீடு, இ.எஸ்.ஐ. மருத்துவ வசதி, தொழில் செய்யும் இடத்தில் இ.எஸ்.ஐ.க்கான பணம் பிடிக்க வேண்டும். வருங்கால வைப்பு நிதிஅனைத்து தொழிலாளர்களுக்கும் அடையாள அட்டை வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகத்தில் தோழி கூட்டமைப்பு சார்பில் கையெழுத்து விழிப்புணர்வு பிரசாரம் நடந்து வருகிறது. அதன் ஒருபகுதியாக கரூர் நிதினேகா கல்வி அறக்கட்டளை சார்பில் மண்மங்கலம் மற்றும் நன்னியூர் பகுதிகளில் நடந்த நிகழ்ச்சிக்கு அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் நாகலட்சுமி தலைமை தாங்கி, பெண் தொழிலாளர்களிடம் விழிப்புணர்வு கையெழுத்து பிரசாரத்தை தொடங்கி வைத்தார்.


Next Story