ஆட்டோ டிரைவர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் தொழிலாளர்: இணை ஆணையர் வழங்கினார்


ஆட்டோ டிரைவர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள்  தொழிலாளர்: இணை ஆணையர் வழங்கினார்
x

தேனியில் ஆட்டோ டிரைவர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்களை தொழிலாளர் இணை ஆணையர் வழங்கினார்

தேனி

தேனி தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) அலுவலகத்தில், தமிழ்நாடு அமைப்புசாரா ஓட்டுனர் நல வாரியத்தில் பதிவு பெற்ற ஆட்டோ டிரைவர்களுக்கு முதலுதவி பெட்டி, காலணி, காக்கி சீருடை ஆகியவை அடங்கிய பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் திண்டுக்கல் தொழிலாளர் இணை ஆணையர் கோவிந்தன் கலந்து கொண்டு மாவட்டத்தில் 2,283 ஆட்டோ டிரைவர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்களை வழங்கும் பணியை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் தேனி தொழிலாளர் உதவி ஆணையர் சிவக்குமார், தொழிலாளர் உதவி ஆய்வாளர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.


Next Story