புனித செபஸ்தியார் சப்பர பவனி


புனித செபஸ்தியார் சப்பர பவனி
x
தினத்தந்தி 26 Jun 2023 12:30 AM IST (Updated: 26 Jun 2023 12:31 AM IST)
t-max-icont-min-icon

தருவைகுளத்தில் புனித செபஸ்தியார் சப்பர பவனி நடைபெற்றது.

தூத்துக்குடி

தமிழகத்தில் நல்ல மழை பெய்யவும், நல்ல தொழில் வளம் பெருகவும், மக்களின் நோய் நொடிகள் நீங்கவும் புனித செபஸ்தியார் திருவுருவ சப்பர பவனி நேற்று காலை தூத்துக்குடி அருகே உள்ள தருவைகுளத்தில் நடந்தது.

தருவைகுளம் மிக்கேல் அதிதூதர் ஆலயத்தில் இருந்து சப்பர பவனியை பங்குதந்தை வின்சென்ட் தொடங்கி வைத்தார். தொடர்ந்து சப்பர பவனி அனைத்து தெருக்களின் வழியாக சென்று மீண்டும் ஆலயத்தை வந்தடைந்தது. இதில் திரளான கிறிஸ்தவ மக்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.


Related Tags :
Next Story