புனித சந்தியாகப்பர் ஆலய சப்பர பவனி


புனித சந்தியாகப்பர் ஆலய சப்பர பவனி
x

ஆத்தூர் புனித சந்தியாகப்பர் ஆலய சப்பர பவனி நடந்தது.

தூத்துக்குடி

ஆறுமுகநேரி:

ஆத்தூர் புனித சந்தியாகப்பர் ஆலய திருவிழா கடந்த 19-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. சேர்ந்தபூமங்கலம் பங்கு தந்தை செல்வன் பெர்னான்டோ, புன்னக்காயல் பங்கு தந்தை பிராங்கிளின் பெர்னான்டோ ஆகியோர் கலந்துகொண்டு கொடியேற்றி, சிறப்பு திருப்பலி நடத்தினர். தொடர்ந்து திருவிழா நாட்களில் தினமும் காலை திருப்பலி, மாலையில் மறையுறை, மாலை ஆராதனையும் நடைபெற்றது.

9-ம் திருவிழா அன்று மாலை ஆராதனை நடந்தது. இதனை ரவீந்திரநாத் அடிகளார், சில்வர்ஸ்டர் மஸ்காராஸ் அடிகளார் ஆகியோர் நடத்தினர். தொடா்ந்து இரவில் சப்பர பவனி நடந்தது. 10-ம் திருவிழா காலையில் ஆடம்பர கூட்டு திருப்பலி மரிய அரசு அடிகளார், விஸ்வாசம் அடிகளார் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. இதில் ஆத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த கிறிஸ்தவர்கள் திரளாக கலந்து கொண்டனர்.


Next Story