சைவ வேளாளர் சங்க மகாசபை கூட்டம்


சைவ வேளாளர் சங்க மகாசபை கூட்டம்
x
தினத்தந்தி 27 Sep 2022 6:45 PM GMT (Updated: 27 Sep 2022 6:46 PM GMT)

தூத்துக்குடியில் சைவ வேளாளர் சங்க மகாசபை கூட்டம் நடைபெற்றது.

தூத்துக்குடி

சைவ வேளாளர் சங்க 79-வது மகாசபை கூட்டம் தூத்துக்குடியில் நடந்தது. விழாவுக்கு சங்க தலைவர் டி.ஏ.தெய்வநாயகம் தலைமை தாங்கினார். பிரம்மநாயகம் முன்னிலை வகித்தார். சைவநெறி காந்தி சுதந்திர போராட்டத்தில் தூத்துக்குடி சார்ந்த நம்மவர்களின் பங்கு என்ற தலைப்பில் சொற்பொழிவாற்றினார்.

கூட்டத்தில் மாநகராட்சியில் 60 வார்டுகளிலும் புதிய உறுப்பினர் சேர்க்கைக்காக பொறுப்பாளர் நியமிக்க வேண்டும், நியமன அதிகாரியாக முன்னாள் கவுன்சிலர் கந்தசாமியை நியமிப்பது, 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்துவது, வ.உ.சி. புகழை பரப்பும் வகையில் மாணவ, மாணவிகளுக்கு கட்டுரை, வினாடி வினா போட்டிகள் நடத்தி சான்றிதழ் வழங்குவது என்றும் வலியுறுத்தினர். இந்த கோரிக்கையை சைவ வேளாளர் சமுதாய மக்களின் சார்பில் அருணா, இளங்கோ ஆகியோர் சங்க தலைவரிடம் அளித்தனர்.

கூட்டத்தில் தாமிரவருணி தமிழ்வனம் தலைவர் லட்சுமணன், மாநகராட்சி கவுன்சிலர் பொன்னப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story