சிவகிரி அருகே இறந்த கல்லூரி மாணவர் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலை மறியல்


சிவகிரி அருகே இறந்த கல்லூரி மாணவர் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலை மறியல்
x

சிவகிரி அருகே இறந்த கல்லூரி மாணவர் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

ஈரோடு

பெருந்துறை

சிவகிரி அருகே இறந்த கல்லூரி மாணவர் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கல்லூரி மாணவர் சாவு

சிவகிரி அருகே உள்ள கந்தசாமிபாளையத்தைச் சேர்ந்தவர் ரவி. அவருடைய மகன் ஹரிசங்கர் (வயது 17). இவர் திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே திட்டுப்பாறையில் உள்ள ஒரு தனியார் கலைக்கல்லூரியில் முதலாம் ஆண்டு கேட்டரிங் பட்டப்படிப்பு படித்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் கந்தசாமிபாளையத்தில் உள்ள லேத் பட்டறைக்கு வேலைக்கு சென்ற ஹரிசங்கர் திடீரென இறந்தார். இதுபற்றி அறிந்ததும் சிவகிரி போலீசார் அங்கு சென்று ஹரிசங்கரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிவகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.

சாலை மறியல்

மேலும் இதுபற்றி தகவல் அறிந்த கந்தசாமிபாளையத்தை சேர்ந்த ஹரிசங்கரின் உறவினர்கள் நேற்று முன்தினம் சிவகிரி அரசு ஆஸ்பத்திரி முன்பு ஒன்று திரண்டனர். பின்னர் ஹரிசங்கரின் சாவுக்கு காரணமானவரை கண்டறிந்து அவர்கள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி போராட்டம் நடத்தினார்கள். இதையடுத்து ஹரிசங்கரின் உடல் அங்கிருந்து பிரேதப் பரிசோதனைக்காக பெருந்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு நேற்று கொண்டு வரப்பட்டது.

இந்த நிலையில் ஹரிசங்கரின் உறவினர்கள் ஏராளமானோர் மாலை 4 மணி அளவில் பெருந்துறை அரசு ஆஸ்பத்திரி எதிரே உள்ள பெருந்துறை-குன்னத்தூர் ரோட்டில் ஒன்று திரண்டனர். பின்னர் ஹரிசங்கர் உடலை வாங்க மறுத்து ரோட்டின் நடுவே அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பேச்சுவார்த்தை

இதுபற்றிய தகவல் கிடைத்ததும் பெருந்துறை உதவி போலீஸ் சூப்பிரண்டு கவுதம்கோயல், இன்ஸ்பெக்டர் சரவணன், சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இந்த சாலை மறியல் மாலை 6 மணிக்கு மேலாக நீடித்தது. தொடர்ந்து அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.


Next Story