ரேஷன் கடைகளில் 5 கிலோ எடை கியாஸ் சிலிண்டர் விற்பனை


ரேஷன் கடைகளில் 5 கிலோ எடை கியாஸ் சிலிண்டர் விற்பனை
x

நாகையில் ரேஷன் கடைகளில் 5 கிலோ எடைகொண்ட கியாஸ் சிலிண்டர் விற்பனையை கலெக்டர் அருண் தம்புராஜ் தொடங்கி வைத்தார்.

நாகப்பட்டினம்

நாகையில் ரேஷன் கடைகளில் 5 கிலோ எடைகொண்ட கியாஸ் சிலிண்டர் விற்பனையை கலெக்டர் அருண் தம்புராஜ் தொடங்கி வைத்தார்.

5 கிலோ கியாஸ் சிலிண்டர்

நாகையில் ரேஷன் கடைகள் மூலம் 5 கிலோ எடைகொண்ட கியாஸ் சிலிண்டர் விற்பனை தொடக்க விழா நடைபெற்றது. விழாவுக்கு மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமை தாங்கினார். எம்.எல்.ஏக்கள் நாகைமாலி, முகமது ஷாநவாஸ், நகரமன்றத் தலைவர் மாரிமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டுறவுசங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் அருளரசு வரவேற்றார்.

விழாவில் 5 கிலோ எடை கொண்ட கியாஸ் சிலிண்டர் விற்பனையை கலெக்டர் அருண் தம்புராஜ் தொடங்கி வைத்து பேசியதாவது:-

திட்டம் தொடங்கி செயல்பட்டு வருகிறது

கூட்டுறவுதுறையின் கீழ் செயல்பட்டு வரும் ரேஷன் கடைகள், சிறு கூட்டுறவு சிறப்பு அங்காடிகள், சூப்பர் மார்க்கெட்டுகள் மூலம் 5 கிலோ எடைகொண்ட கியாஸ் சிலிண்டர் விற்பனை திட்டம் தொடங்கி செயல்பட்டு வருகிறது. இதைத்தொடர்ந்து நாகை மாவட்டத்தில் உள்ள பொதுப்பணியாளர்கள் கூட்டுறவு பண்டகசாலையில் நடத்தப்படும் ரேஷன் கடையில் இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

ரூ.1499 செலுத்தி பெற்றுக்கொள்ளலாம்

இதன் மூலம் பொதுமக்கள், சிறுவியாபாரிகள் எவ்விதமுன்பதிவுமின்றி இந்த 5 கிலோ எடை சிலிண்டரை ரூ.1499-ஐ செலுத்தி பெற்றுக்கொள்ளலாம். எரிவாயு தீர்ந்த காலி சிலிண்டரை திரும்பகொடுத்து ரூ.555-ஐ செலுத்தி புதிய சிலிண்டரை கொள்ளலாம். பொதுமக்கள் தங்கள் வசதிக்கேற்ப காலியான எரிவாயு உருளையினை எந்த இடத்திலும் (பெட்ரோல் பங்குகள், வெளிமாவட்டங்களிலும்) கொடுத்து புதிய எரிவாயு நிரப்பப்பட்ட உருளையினை எரிவாயுக்கான தொகையை மட்டும் கொடுத்துபெற்றுக்கொள்ளலாம்.இவ்வாறு அவர் கூறினார்.

விழாவில் சரக துணைபதிவாளர் முகமது நாசர், தொடர்புஅலுவலர் செல்வகுமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story