டாஸ்மாக்கில் கூடுதல் விலைக்கு மதுபானங்கள் விற்பனை: 20 விற்பனையாளர்கள் மீது அதிரடி நடவடிக்கை


டாஸ்மாக்கில் கூடுதல் விலைக்கு மதுபானங்கள் விற்பனை:    20 விற்பனையாளர்கள் மீது அதிரடி நடவடிக்கை
x
தினத்தந்தி 7 Dec 2022 12:15 AM IST (Updated: 7 Dec 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

கூடுதல் விலைக்கு மதுபானங்கள் விற்பனை செய்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் 20 டாஸ்மாக் கடைகளின் விற்பனையாளர்கள் மீது அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

விழுப்புரம்


விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் 220 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கடைகளில் மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள் என 1,100-க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர்.

இதனிடையே அரசு டாஸ்மாக் மதுபானங்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வருவதாக பல்வேறு புகார்கள் எழுந்தன. அந்த புகாரின் அடிப்படையில் வெளிமாவட்ட அதிகாரிகள் மூலம் விழுப்புரம்- கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது.

விற்பனையாளர்கள் மீது நடவடிக்கை

இந்த சோதனையின்போது 20 கடைகளில் கூடுதல் விலைக்கு மதுபானங்கள் விற்பனை செய்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து அந்த 20 கடைகளின் விற்பனையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு அவர்கள் மாற்றுக்கடைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் அவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story